»   »  ஜம்போ 3டி இப்போ ஜம்புலிங்கம்! ஜப்பான் படம்னா சும்மாவா? …

ஜம்போ 3டி இப்போ ஜம்புலிங்கம்! ஜப்பான் படம்னா சும்மாவா? …

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜப்பானில் படமாக்கப்பட்ட ‘ஜம்போ 3' படம் இப்போது ‘ஜம்புலிங்கம்' ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். எல்லாம் வரிவிலக்கை கருத்தில் கொண்டுதானாம்.

வரிவிலக்கு வேண்டும் என்றால் தமிழில் பெயர் இருக்க வேண்டும். இந்த சின்ன விஷயத்தைகூட கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் படத்துக்கு பிற மொழிகளில் பெயர் வைத்துவிட்டு ரிலீஸ் நேரத்தில் பெயரை தமிழுக்கு மாற்றும் கத்துக்குட்டித்தனம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது.

டீல் என்ற பெயரை வா என்று மாற்றி டீலை கேப்ஸனாக்கினார்கள். மணிரத்னம்கூட ஓகே கண்மணி என்று பெயர் வைத்து பிறகு ஓ காதல் கண்மணி என்று பெயரை மாற்றினார். ஜம்போ 3டி படத்தின் பெயரையும் தற்போது ஜம்புலிங்கம் என்று மாற்றினர்.

சக்சஸ் மீட் பார்ட்டி

சக்சஸ் மீட் பார்ட்டி

ஹரி, ஹரீஷ் இணைந்து இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்றது. அஞ்சான் டீஸரை அதிகம் பேர் பார்த்தார்கள் என்பதற்காக சக்சஸ் மீட் நடத்தினார்கள் என்றால், இவர்கள் ஜப்பான் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்ததற்காக சக்சஸ் மீட் நடத்தி அஞ்சானையே பீட் செய்தார்கள்.

இரட்டை இயக்குநர்கள்

இரட்டை இயக்குநர்கள்

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஆ'. இதில் கோகுல், பாபி சிம்ஹா, பாலா, மேக்னா நடித்திருந்தார்கள். ஹரி-ஹரிஷ் என்னும் இரட்டையர்கள் இப்படத்தை இயக்கியிருந்தார்கள். ஆ படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இயக்கும் புதிய படம் ‘ஜம்போ 3டி'.

ஜப்பான் தயாரிப்பாளர்கள்

ஜப்பான் தயாரிப்பாளர்கள்

எம்.எஸ்.ஜி மூவீஸ் சார்பில் ஜி.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது.

கதாநாயகன் கோகுல்

கதாநாயகன் கோகுல்

'ஆ' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் கோகுல் மீண்டும் கதாநாயகன் வேடத்தில் நடிக்கிறார்.

மீண்டும் சுகன்யா

மீண்டும் சுகன்யா

இவருடன் சினிமாவிற்கு சிலகாலம் இடைவெளி விட்டிருந்த சுகன்யா நடிக்கிறார். பேபி ஹம்சிகா, அஞ்சனா, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் 'கும்கி' அஷ்வின் ஆகியோர் நடித்துள்ளனர்.

யார் ஜம்புலிங்கம்

யார் ஜம்புலிங்கம்

ஜம்போ என்ற ஜம்புலிங்கம் ஆக வரும் கோகுல், மைம்-ஸ்லாப்ஸ்டிக் எனும் நகைச்சுவை நடிப்பு பாணியை கையாண்டு இருக்கிறார். படத்தில் பேபி ஹம்சிகா துடுக்கான குழந்தை கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார்.

ஜப்பான் நடிகர்கள்

ஜப்பான் நடிகர்கள்

இப்படம், குழந்தைகளை கவரக்கூடியதாய் அமையும். 100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள இப்படம் ஜப்பானில் 40 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.'' என்கின்றனர் ஹரி-ஹரிஷ் இரட்டையர்கள்.

ஜப்பானுக்கு போகும் ஜம்போ

ஜப்பானுக்கு போகும் ஜம்போ

ஜப்பானியர்கள் நடித்துள்ளதால் இப்படத்தை ஜப்பானிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இப்படம் முழுக்க முழுக்க ஜப்பானின் அழகுமிகு நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் ஜப்பானிய கலாச்சாரத்தை இந்திய மக்கள் அறியும் வகையிலும் உருவாக்கி வருகிறார்கள். கோடைவிடுமுறையில் ரிலீஸ் ஆகிறார் ஜம்புலிங்கம் என்கின்றனர் படத்தின் தயாரிப்பாளர்கள்.

English summary
Upcoming Tamil drama "Jumbo 3D", Name Changed in Jumbulingam. Which is being made in collaboration with a Japanese producer, will feature over 100 Japanese actors, according to its directors Hari Shankar and Hareesh Narayan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil