ஜம்ப் கட்ஸ்ல இருந்து ஒரே ஜம்ப்.. இப்போ ஹரிபாஸ்கர் கோலிவுட்டின் ஹீரோ!

சென்னை: யூடியூபில் இருந்து பல பிரபலங்கள் தொடர்ந்து சினிமாவை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

யூடியூபில் கலக்கியது போலவே சினிமாவிலும் கலக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் புது வரவாக Jump Cuts ஹரிபாஸ்கரும் இணைந்துள்ளார்.

நினைவோ ஒரு பறவை எனும் தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் ஹரி பாஸ்கர்.

அந்த படத்தில் இடம்பெற்றுள்ள மேனா மினிக்கி பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

புது ஐடியா

புது ஐடியா

யூடியூபில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்தில் கலக்கி வந்த நிலையில், தனது புது ஐடியாவான Jump Cuts என்ற ஐடியாவையே சேனல் பெயராக மாற்றி தனி ஒருவனாக பல பரிமாணங்களில் நடித்து யூடியூபில் பல லட்சம் ரசிகர்களை சப்ஸ்கிரைபராக மாற்றியவர் ஹரி பாஸ்கர்.

யூடியூப் படை

யூடியூப் படை

நாளைய இயக்குநர்களில் கலக்கிய கார்த்திக் சுப்புராஜ், விஜய்சேதுபதி, நலன் குமாரசாமி, பாலாஜி என பல இயக்குநர்கள், நடிகர்கள் கோலிவுட்டில் கலக்கி வரும் நிலையில், தற்போது யூடியூப் படை கோலிவுட்டில் கால் அடியெடுத்து வைத்துள்ளது. ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்தின் பிளாக்‌ஷிப் டீம், பரிதாபங்கள் கோபி, சுதாகர், எருமை சாணி விஜய், ஹரிஜாவை தொடர்ந்து தற்போது ஹரிபாஸ்கரும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

நினைவோ ஒரு பறவை

மைண்ட் டிராமா புரொடக்‌ஷன் மற்றும் டக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள நினைவோ ஒரு பறவை படத்தை அறிமுக இயக்குநர் ரிதுன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தான் ஜம்ப் கட்ஸ் ஹரிபாஸ்கர் அறிமுகமாகிறார்.

இவர்தான் நாயகி

இவர்தான் நாயகி

ஜம்ப் கட்ஸ் யூடியூப் வீடியோக்களில் பெண்களே இல்லாமல், இவரே பெண் கேரக்டரையும் இமிடேட் செய்து நடித்திருப்பார். ஆனால், ஹீரோவாக மாறியுள்ள இவருக்கு நினைவோ ஒரு பறவை படத்தில் சஞ்சனா சாரதி ஜோடி சேர்ந்துள்ளார். துப்பாக்கி, எனை நோக்கிப் பாயும் தோட்டா என பல படங்களில் தங்கை கதாபாத்திரத்தில் சஞ்சனா நடித்துள்ளார்.

தமன் இசை

கோலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள மேனா மினுக்கி பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X