வாயக்கட்டி வயத்தக்கட்டி வாழுகிற சிங்கக்குட்டி... ஜுங்கா ஆடியோ டீசர்!
ஜுங்கா படத்தின் ஆடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தின் ஆடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை அடுத்து, இயக்குனர் கோகுல் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கம் படம் 'ஜுங்கா'. சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முழு நீள காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராக்ஸ்டார் ரமணியம்மா குரலில் விரைவில் 'ஜுங்கா' ஆடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடியோ டீசரின் வரிகள் பின்வருமாறு:
"வாயக்கட்டி வயத்தக்கட்டி வாழுகிற சிங்கக்குட்டி...
என் பேரான்டி வெள்ளக்கட்டி வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி...
சன் ஆப் ரங்கா... கிரான்ட் சன் ஆப் லிங்கா...
கம்மிங் சூனு ஜுங்கா... ஆடியோ கம்மிங் சூனு ஜுங்கா"
என அந்த பாடல் வரிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications











