ஜுங்கா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜுங்கா படத்தின் முதல் நாள் வசூல் விபரம் தெரிய வந்துள்ளது.
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ஜுங்கா படம் நேற்று ரிலீஸானது. விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்ததை பார்த்து சிரித்து மாளவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர்.

ரசிகர்கள் படத்தை கொண்டாடும்போதிலும் விமர்சகர்களோ வேறு மாதிரி தெரிவித்துள்ளனர். இருப்பினும் விமர்சனங்களால் தியேட்டருக்கு செல்வோரை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஜுங்கா ரிலீஸான முதல் நாளில் மட்டும் ரூ. 7.6 கோடி வசூல் செய்துள்ளதாம். அதிலும் சென்னையில் மட்டும் ரூ. 1.9 கோடி வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது.
ஒரு படத்திற்கு வார இறுதி நாட்கள் மிகவும் முக்கியமானது. நேற்று த்ரிஷாவின் மோகினி படமும் ரிலீஸாகியுள்ளது. பாக்ஸ் ஆபீஸில் டானை பேய் வென்றதா என்பது இனி தான் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications











