டான் டாவடிக்கக் கூடாது, அண்ணனுக்கு காலே கால் டாக்சி: தெறிக்கும் ஜுங்கா ட்ரெய்லர் #Junga
Recommended Video

சென்னை: ஜுங்கா ட்ரெய்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா, சரண்யா பொன்வண்ணன், மடோனா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.
விழாவுக்கு படக்குழு ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்து அசத்தியது.
பாடல்கள்
இசை வெளியீட்டு விழாவில் 4 பாடல்கள் வெளியிடப்பட்டது. மேலும் படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டனர். குட்டீஸ்கள் ஜுங்கா பாடலுக்கு டான்ஸ் ஆடி அங்கிருந்தவர்களை அசத்தினார்கள். இசை வெளியீட்டு விழா வித்தியாசமாக நன்றாக நடந்தது.
விஜய் சேதுபதி
ட்ரெய்லர் அதிரடியாக வந்திருக்கிறது. எப்பவுமே மத்தவங்களை கீழே இறக்கிவிட்டுட்டு நாம மேலே வரணும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு என்று என்ற விஜய் சேதுபதியின் பன்ச் டயலாக்குடன் ட்ரெய்லர் துவங்குகிறது.

மக்கள் செல்வன்
இந்த இடத்திற்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன் என்று உண்மையை சொல்கிறார் விஜய் சேதுபதி. படத்தில் ஆக்ஷனுக்கும், காமெடிக்கும் குறைவே இருக்காது என்பது தெரிகிறது.

காமெடி
பிளைட்டை ஹைஜாக் பண்ணுற டானை பார்த்திருக்கிறேன், ஆனால் பிளைட்டுக்குள்ள உள்ளதை எல்லாம் ஹைஜாக் செய்ற டானை இப்பதான் பார்க்கிறேன் என்று யோகி பாபு கூறுவதை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அண்ணனுக்கு காலே கால் டாக்சிடா, ஒரு டான் டாவடிக்கக் கூடாது என்று விஜய் சேதுபதி கூறுவது நிச்சயம் சூப்பர் ஹிட் பன்ச் டயலாக் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











