கமல் செய்த மிகப்பெரிய உதவி.. என்னைக்கும் மறக்க மாட்டோம்.. ஜூனியர் பாலையா மகன் நெகிழ்ச்சி!

சென்னை: கமல் செய்த மிகப்பெரிய உதவியை என்னைக்கும் மறக்க மாட்டோம் என்று ஜூனியர் பாலையா மகன் தெரிவித்துள்ளார்.

ஜூனியர் பாலையா நவம்பர் 2ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் ஜூனியர் பாலையாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Junior Balaiah son emotional talks about Kamals help

பல படங்களில்: நடிகர் ஜூனியர் பாலையா 1975 ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான மேல்நாட்டு மருமகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், சின்னத்தாயி, சங்கமம், வின்னர் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உயிரிழந்தார்: பழம் பெரும் நடிகரான இவர், அஜித் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் உதவியாளராக நடித்திருந்தார். இவர் கடைசியாக என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இதையடுத்து கடந்த 2ந் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்ச்சி: இந்நிலையில், ஜூனியர் பாலையாவின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ஜூனியர் பாலையாவின் மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அப்பா ரொம்ப கஷ்டப்பட்டார். அந்த நேரத்தில், மருத்துவமனை சிகிச்சைக்கு பணம் இல்லாத சூழ்நிலை இருந்தது. அப்போது கமல் சாரிடம் நாங்க உதவி கேட்டோம். அப்போ அவர் மூன்று நாட்கள் தேடி அலைந்து ஒரு பெஸ்ட் ஹாஸ்பிடலில் என் அப்பாவை சேர்த்தார்.

மிகவும் நன்றி: மருத்துவமனையில் இருந்து அப்பா டிஸ்சார்ஜ் ஆகி வரும் வரை ஆன அனைத்து செலவையும் கமல் சாரே கவனித்துக்கொண்டார். அது மட்டுமில்லாமல் தினமும் அப்பாவுக்கு என்ன மாதிரி சிகிச்சை கொடுக்கப்படுகிறது என்பதை அவரே மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அந்த நேரத்தில் அவர் செய்த உதவியை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம் என்று நடிகர் ஜூனியர் பாலையா நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X