ஷண்முக பாண்டியன் கோபமாக விரல்களை மடக்கி கொடுக்கும் போஸ் இருக்கே... ஸ்ஸ்ஸ்ஸ்...
சென்னை: விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் சகாப்தம் படத்தில் நடிப்பு, டான்ஸ், சண்டை என்று பல்வேறு துறைகளில் தனது திறமையை காட்டி வருகிறார்.
கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்போர் சங்கத்தைச் சேர்ந்த விஜயகாந்த் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தார். ரசிகர்களை சேர்த்தார், அரசியலில் குதித்தார். தற்போது அரசியல் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தந்தையின் வழியில் விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முக பாண்டியன் நடிகராகியுள்ளார்.

சகாப்தம்
திரை உலகில் தனது பயணத்தை துவங்கும் ஷண்முக பாண்டியனின் முதல் படத்தின் பெயர் சகாப்தம் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

தேடித் தேடி
தனது மகனுக்கேத்த மகராசியை விஜயகாந்த் தேடித் தேடி அலைந்தார். ஸ்ரீதேவியின் மகளுக்கு ஹீரோயினுக்கான உடல்வாகு இல்லை என்று அவரை நிராகரித்தனர். இந்நிலையில் தான் புனே சென்ற விஜயகாந்த் மாடல் அழகியை தனது மகனுக்கு ஜோடியாக தேர்வு செய்தார்.

பவர் ஸ்டார்
ஒன்னுமே இல்லாவிட்டாலும் எல்லாமே இருப்பது போன்று பேசும் பவர் ஸ்டார் இந்த படத்தில் உள்ளார். சந்தானத்தை போன்று ஷண்முக பாண்டியும் பவரை ஓட்டி ஓட்டியே படத்தை ஓட்டப் போகிறாரா என்று தெரியவில்லை.

டான்ஸ், சண்டை
படத்தில் ஷண்முக பாண்டி கலர், கலராக ஆடை அணிந்து டான்ஸ் ஆடியுள்ளார். மேலும் தாய்லாந்தில் சாமுராய் வாளை வைத்து சண்டை எல்லாம் போட்டுள்ளார்.

சிம்பு
ஷண்முக பாண்டி ஆடும் பாடலுக்கு சிம்பு குரல் கொடுத்துள்ளார். சிம்பு தனது படங்கள் தவிர்த்து பிற ஹீரோக்களுக்காகவும் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர்
மகனின் முதல் படம் சூப்பராக வர வேண்டும் என்று நினைத்து விஜயகாந்தும், அவரது மனைவியும் இயக்குனர் சந்தோஷ் குமாருக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்தனர். இதனால் கடுப்பான மனிதர் படப்பிடிப்பில் இருந்து ஓடிவிட்டார். இதையடுத்து வேறு ஒருவரை வைத்து படத்தை எடுத்து வருகிறார்கள்.

கருப்பு பனியன்
ஷண்முக பாண்டியன் கருப்பு பனியன் அணிந்து முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைவிரல்களை அப்படியே மடக்கி கொடுத்திருக்கும் போஸ் இருக்கே...ஸ்ஸ்ஸ்ஸ்...


Click it and Unblock the Notifications











