தலைவி படத்துல நிறைய மிஸ்டேக்ஸ் இருக்கு.. பல விஷயங்களை மாத்திட்டாங்க.. கொதிக்கும் ஜூனியர் எம்ஜிஆர்!
சென்னை: தலைவி படத்தில் பல தவறுகள் இருப்பதாக எம்ஜிஆரின் பேரனான ஜூனியர் எம்ஜிஆர் தெரிவித்துள்ளார்.
கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், சைவம், இது என்ன மாயம், தலைவா,தேவி, லக்ஷ்மி, தேவி 2 உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏஎல் விஜய்.
தற்பேது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த 10 ஆம் தேதி வெளியானது.

ஏஎல் விஜய் இயக்கத்தில் தலைவி
இப்படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தலைவி படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழியில் ரிலீஸ் ஆகிறது.

தியேட்டரில் ரிலீஸ் ஆன தலைவி
தலைவி படம் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தப் படம் தள்ளிப்போனது. இதனை தொடர்ந்து தலைவி படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் பரவியது. ஆனால் அதனை மறுத்த படக்குழு என்ன ஆனாலும் படம் திரையரங்கில்தான் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்தது.

அச்சு அசலாக மறைந்த நடிகர்
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் தலைவி படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தில் இடம்பெற்ற கேரக்டர்களின் போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. குறிப்பாக நடிகர் அரவிந்த் சாமி, அச்சு அசலாக மறைந்த நடிகரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரை போன்றே இருந்தார்.

ஜூனியர் எம்ஜிஆர்
ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை. அதேநேரத்தில் படத்தில் சில சம்பவங்கள் உண்மைக்கு மாறாக காட்டப்பட்டுள்ளதாக படம் ரிலீஸ் ஆன நாளிலேயே அதிமுக சார்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் எம்ஜிஆரின் பேரனான ஜூனியர் எம்ஜிஆர் தலைவி படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

பல விஷயங்கள் மாற்றி காட்டப்பட்டுள்ளது
அதில் தலைவி படத்தில் நிறைய தவறுகள் இருப்பதாகவும் பல விஷயங்கள் மாற்றி காட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் ஜூனியர் எம்ஜிஆர். அவர் பேசியிருப்பதாவது. தலைவி படத்தை பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தது. எங்க தாத்தாவோட கதை. எங்க அம்மா கனெக்ட்டிவிட்டி இருக்குறதால பாக்கணும்னு தோனுச்சு.

முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளப்பட்டது
ஓவர் ஆல் பார்க்கும் போது நல்ல படம் தான். ஆனால் குயின் சீரிஸை பார்த்து கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணியிருக்கலாம். அம்மாவ பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு மேலே வந்துள்ளார். அவர் ஒரு அயர்ன் லேடி. எம்ஜிஆர் ஐயா இறந்தபோது, அந்த இடத்தில் அவர் முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளப்பட்டது போன்ற காட்சிகள் இருந்தது.

எம்ஜிஆர் ஐயா வீடு
அவ்ளோ கஷ்டப்பட்டதால் தான் இந்த அளவுக்கு வந்தார்கள். தலைவி படத்தில் சில சில மிஸ்டேக்ஸ் இருக்கு. முழுவதும் ரிசர்ச் செய்திருக்கலாம் அல்லது எங்களிடம் கேட்டிருக்கலாம். எம்ஜிஆர் ஐயா வீடு என்று ஒரு வீட்டை காட்டியிருக்கிறார்கள். அதற்கு எங்கள் வீட்டையே காட்டியிருக்கலாம். உண்மையாக இருந்திருக்கும். எங்களிடம் கேட்டிருந்தால் நாங்கள் கொடுத்திருப்போம்.

எம்ஜிஆர் ஐயா போன்றே நடித்துள்ளார்
மனைவி விஷயத்தில்.. இரண்டாவது மனைவியை முதல் மனைவி என சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் கொஞ்சம் ரிசர்ஜ் செய்திருக்கலாம். அரவிந்த் சாமி எம்ஜிஆர் ஐயா போன்றே நடித்துள்ளார். அதிக முயற்சி செய்துள்ளார். கங்கனா ரனவத், அந்த காலத்து ஜெயலலிதா அம்மா எப்படி இருந்தாங்களோ அப்படியே செய்துள்ளார்கள். இவ்வாறு ஜூனியர் எம்ஜிஆர் தெரிவித்துள்ளார்.

இரும்பன் படத்தில் நடித்து வருகிறார்
ஜூனியர் எம்ஜிஆர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் உள்ளார். கேங்ஸ்டர் 21 என்ற படத்தில் நடித்துள்ள ஜூனியர் எம்ஜிஆர், தற்போது இரும்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











