மகாராஜா மகளுடன் பட்டாயாவில் ஜூனியர் எம்ஜிஆர் என்ன பண்றாரு பாருங்க.. ஒரே பார்ட்டி மோடு தான்!
சென்னை: மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடிகை சாச்சனா நடித்திருந்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் போட்டியாளராக சாச்சனா பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். மலேசியா மற்றும் தாய்லாந்து என தற்போது ஜூனியர் எம்ஜிஆர் டூர் அடித்து வரும் நிலையில், அவருடன் இணைந்து சென்றுள்ள சாச்சனா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வரும் நிலையில், ஜூனியர் எம்ஜிஆரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

ஏற்கனவே சசிகுமார், சத்யராஜ், சமுத்திரகனி நடித்த எம்ஜிஆர் மகன் படத்திலும் ஜூனியர் எம்ஜிஆர் வில்லனாக நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
பட்டாயாவில் சாச்சனா, ஜூனியர் எம்ஜிஆர்: பிக் பாஸ் பிரபலம் மற்றும் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் ரீல் மகளாக நடித்த சாச்சனா ஜூனியர் எம்ஜிஆர் உடன் இணைந்து மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு சில கலை நிகழ்ச்சிக்காக சென்றுள்ள நிலையில், அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். பட்டாயாவில் சாச்சனாவுடன் பார்ட்டி வைபில் ஜூனியர் எம்ஜிஆர் போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.
தங்கையும் நானும்: சென்னையில் இருந்து கிளம்பும் போதே என்னுடைய தங்கை சாச்சனாவும் நானும் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு முதல் முறையாக சில ஈவென்ட்டுகளுக்கு இணைந்து செல்கிறோம். ரொம்பவே சந்தோஷமாக உள்ளது என ஜூனியர் எம்ஜிஆர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக குறிப்பிட்ட நிலையில், ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பார்ட்டி வைப்ஸ்: தாய்லாந்தின் பட்டாயா என்றாலே பார்ட்டி வைப்ஸ் தான் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஜூனியர் எம்ஜிஆர் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்தி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், அடிக்கடி இதுபோல வெளிநாடுகளுக்கு டூர் சென்று பார்ட்டி செய்து வருகிறார் என்றும் ஒரே பார்ட்டி வைப் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
செம மாஸா இருக்காரே: கருப்பு நிற பார்டி சட்டையில் கூலர்ஸ் அணிந்துக் கொண்டு ஜூனியர் எம்ஜிஆர் செம மாஸாக இருக்காரே என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். பிக் பாஸில் பார்த்ததை விட சாச்சனா இன்னும் குழந்தையாக தெரிகிறாரே ஒருவேளை ஜூனியர் எம்ஜிஆர் பிரம்மாண்டமாக இருப்பதால் அவர் அருகே அப்படித் தெரிகிறாரா என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சீனா வரை சென்ற புகழ்: நடிகை சாச்சனாவுக்கு மகாராஜா படத்தின் மூலம் சீனா வரை ரசிகர்கள் உள்ளனர். மலேசியா மற்றும் தாய்லாந்து மக்களும் மகாராஜா படத்தை விரும்பி பார்த்த நிலையில், எங்கே சென்றாலும் அவருக்கு ஃபேன்ஸ் அதிகமாகவே உள்ளதாக கூறுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாச்சனா எங்கே ஆளே காணோம் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஜூனியர் எம்ஜிஆர் இப்படியொரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்து அவருக்கும் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











