நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்!
நடிகை கேப்ரில்லா செல்லஸுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : ஐரா படத்தில் நயன் தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகைக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.
முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் ஐரா. கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் கருப்பான தோற்றத்தில் நடித்திருந்தார் நயன். அந்த கதாபாத்திரத்தின் சிறு வயது தோற்றத்தில் கேப்ரில்லா செல்லஸ் என்ற நடிகை நடித்திருந்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குக் கூட கருப்பழகி என்றே அவர் பெயர் வைத்துள்ளார் கேப்ரில்லா. நீண்ட காலமாக இவரும் ஆகாஷ் என்ற ஒளிப்பதிவாளரும் காதலித்து வந்தனர். தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கேப்ரில்லா. கூடவே தனது வருங்கால கணவருடனான புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அப்பதிவில் அவர், 'தங்களது கனவு நனவானது என்றும், வரும் ஜனவரியில் திருமணம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக நயனும், விக்னேஷ் சிவனும் காதலர்களாகவே உள்ளனர். நயன் நூறு படங்களை முடித்த பிறகு தான் திருமணம் என்றும், அடுத்த வருடம் திருமணம் என்றும் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இதனால் எப்போது இவர்களது திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











