ஒரே நாள்ல வந்தா இப்படித்தான்... கூட்டாக கொண்டாடிய பிரபலங்கள்... ரசிகர்கள் வாழ்த்து!
ஐதராபாத் : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் சிறப்பான வசூல்சாதனை செய்து வருகிறது. இதையடுத்து அவர் மிகவும் உற்சாகமடைந்துள்ளார். இதேபோல இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியுள்ள கேஜிஎப் சாப்டர் 2 படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்து வசூலில் தொடர்ந்து மற்றப்படங்களை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்து வருகிறது.

பிரபல நடிகர்
தெலுங்கில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார் ஜூனியர் என்டிஆர். இவரது தந்தை மிகச்சிறந்த நடிகராகவும் அரசியல் தலைவராகவும் ஜொலித்த நிலையில், இவரும் தற்போது நடிகராக மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஆர்ஆர்ஆர் படம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியானது.

ஆர்ஆர்ஆர் படம்
இந்தப் படம் பிரம்மாண்டத்திற்கு எடுத்துக்காட்டாக வழக்கம்போல ராஜமௌலியின் படம்போல உருவாகியிருந்தது. சுதந்திர காலக்கட்டத்தை கதைக்களமாக கொண்டிருந்தது. அந்தவகையில் ராம்சரணுடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் இந்தப் படத்தில் நடித்திருந்தார். இருவருக்கும் படத்தில் இணையான கேரக்டர் இருந்தது.

கேஜிஎப் சாப்டர் 2 படம்
இதையடுத்து பான் இந்தியா படமாக வெளியாகியிருந்தது கேஜிஎப் சாப்டர் 2. இந்தப் படத்தின் முதல் பாகமே மிரட்டியிருந்த நிலையில், இதன் இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இந்தப் படம் மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து மற்றப் படங்களை ஓரங்கட்டிவிட்டு இந்தப் படம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்ஷனை அள்ளி வருகிறது.

சலார் படத்தில் பிசி
இந்தப் படத்தின் மூன்றாவது பாகம் குறித்து தற்போதே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதன் அடுத்த பாகம் உருவாக 8 ஆண்டுகள் ஆகும் என்று பிரஷாந்த் நீல் தெரிவித்துள்ளார். அவர் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக உள்ளார். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார்.

என்டிஆர் 31 படம்
அடுத்ததாக ஜூனியர் என்டிஆருடன் என்டிஆர் 31 படத்தையும் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது பிரஷாந்த் நீல் மேற்கொண்டுவரும் நிலையில், அடுத்த ஆண்டில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் இவர்கள் இருவரும் முதல்முறையாக இணைகின்றனர்.

ஒரே நாளில் திருமண நாள்
இதனிடையே நேற்றைய தினம் ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் இருவரின் திருமண நாள் ஒரே நாளில் வந்ததையடுத்து இருவரும் இணைந்து தங்களது மனைவிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜூனியர் என்டிஆர் இரண்டு ஜோடிகளும் இணைந்துள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











