twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பயமுறுத்தும் கொரோனா.. ஜூனியர் என் டி ஆர்.. ராம் சரண் விழிப்புணர்வு வீடியோ!

    |

    ஐதராபாத்: கொரோனா வைரஸ் பற்றி ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    Recommended Video

    பயமுறுத்தும் கொரோனா.. ஜூனியர் என் டி ஆர்.. ராம் சரண் விழிப்புணர்வு வீடியோ!

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், உலக நாடுகளில் அதிக அளவில் பரவிய இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது.

    Junior ntr and ram charan raise awareness about corona

    பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என பல பணிகள் தடைப்பட்டுள்ளன, மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது ஒரு தொற்று நோய் தான் என்றும் அதிலிருந்து பாதுகாத்து கொள்ள சில வற்றை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரமான யோகி பாபு மற்றும் நிரோஷா ஆகியோரை வைத்து இந்த வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டது. இந்த விளம்பரத்தால் எதை செய்ய வேண்டும் எதனை செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஈசியாக சென்று சேர்ந்தது.

    Junior ntr and ram charan raise awareness about corona

    அது போன்று மற்றுமொரு விளம்பரத்தை தெலுங்கு திரையுலகினர் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கி வரும் திரைப்படம் "RRR" இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோர் இணைந்து தங்களது ரசிகர்களுக்கு மற்றும் நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை வழங்கியுள்ளனர்.

    உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள ஆறு அறிவுரைகளை கடைபிடித்தால் கொரோனா வைரஸ்லிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்றும் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்றும் ஒரு நாளுக்கு சுமார் ஏழு முதல் எட்டு தடவை கைகளை நன்றாக கழுவ வேண்டும் மேலும் கை குலுக்க வேண்டும் என்றும் கட்டி அனைக்க வேண்டாம் இதனால் இது வேகமாக பரவும் என்றும் அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

    மேலும் இது போன்ற அறிவிப்புகள் பிரபலங்களிடம் இருந்து வந்தால், மக்களிடையே வேகமாக சென்று சேரும் என்பது இது மூலமாக நிரூபணமாகியுள்ளது. இந்த அறிவுரை வழங்கிய இந்த இரு திரை ஜாம்பவான்களுக்கு வாழ்த்து வந்து குவிகின்றது

    ஜீனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரும் கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வு காணொலியை வெளியிட்டு இருக்கின்றனர் .இதில் பேசிய இருவரும் கொரோனா பாதிப்பில் சிக்கி கொள்ளாமல் இருக்கும் வழிகளையும். என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதனையும் கூறியுள்ளனர். மேலும் வாட்சாப்பில் வரும் வதந்திகளை சரியான விளக்கம் இல்லாமல் பகிர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

    மேலும் கோவிட் 19 என்ற கொரோனா தொற்றை பற்றிய தகவல்களுக்கு உலக சுகாதாரதுறையின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தை பின்பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படியொரு வீடியோ அவசியமான ஒன்றே இந்தியாவில் வேகமாக பரவி வரும் இந்த நோய்க்கு எதிராக இந்திய அரசு செயல்பட்டு வந்தாலும் சரியான விழிப்புணர்வு மக்களை சென்று சேர வேண்டும்.

    English summary
    Junior ntr and ram charan raise awareness about corona virus
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X