வெற்றிமாறனை குறிவைக்கும் ஆர் ஆர் ஆர் ஹீரோக்கள்... என்ன சொன்னார்கள் தெரியுமா!

சென்னை: பாகுபலி பிரம்மாண்டத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர்

ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்திய அளவில் உள்ளது

சமீபத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் கலக்கிகொண்டு உள்ள நிலையில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாக விருப்பத்தை தெரிவித்துள்ளனர்

 சாதனைகளை உடைக்க

சாதனைகளை உடைக்க

இந்திய சினிமாவில் இதுவரை இருந்த அனைத்து வசூல் சாதனைகளை சுக்குநூறாக உடைத்து பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்பை இயக்கியவர் இயக்குனர் ராஜமௌலி பாகுபலியை விடவும் பிரம்மாண்ட படத்தை இயக்க முடியுமா என பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அந்த சாதனையையும் முறியடிக்க இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர்.

 இரண்டு சுதந்திர போராட்ட தியாகிகள்

இரண்டு சுதந்திர போராட்ட தியாகிகள்

ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என்ற இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் இரண்டு சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த படமாக வெளியாகி உள்ளது.

 ஆர் ஆர் ஆர்

ஆர் ஆர் ஆர்

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இந்த படத்தில் வெறித்தனமாக நடித்துள்ளனர். பாகுபலிக்கு இணையாக இந்த படம் தமிழிலும் வசூல் சாதனையை செய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இருவரும் நடிக்க குறி வைத்துள்ளனர்.

 ஒவ்வொன்றும் வித்தியாசமாக

ஒவ்வொன்றும் வித்தியாசமாக

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் இந்திய அளவில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை மற்றும் சமீபத்தில் வெளியான அசுரன் என வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்று வருவதோடு ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி வருகிறது.

 வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை

அடுத்ததாக விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் இதில் நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார் அதை தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தொடங்கியுள்ளார் வெற்றிமாறன். இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் படக்குழு கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் பேசிய ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் படைப்புகள் எங்களை பிரமிக்க வைத்துள்ளது அவருடைய திரைப்படங்களுக்கு நாங்கள் மிகப் பெரிய விசிறி எனவே வெற்றிமாறன் இயக்கத்தில் நாங்கள் நடிக்க ஆவலுடன் உள்ளோம் என தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X