Allu Arjun : வெறும் Hugs மட்டும் தானா.. அல்லு அர்ஜூனிடம் பார்ட்டி கேட்ட ஜூனியர் என்டிஆர்!

சென்னை : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைப்பிரபலங்கள் ஒன்று திரண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி புஷ்பா திரைப்படம் வெளியானது.

Junior NTR asked to Birthday party with Allu Arjun

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

புஷ்பா : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூனின் நடிப்பில் புஷ்பா திரைப்படம் உருவானது. லாரி டிரைவராக இருந்த அல்லு அர்ஜூன் அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி விட்டு செம்மர கடத்தல் மன்னனாகவே மாறிவிட்டார். முதல் பாகத்தில் அல்லு அர்ஜூனின் பாடி லாங்குவேஜ், பேச்சு, என சும்மா தரமாக இருந்தது. உலகம் முழுவதும் இப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

Junior NTR asked to Birthday party with Allu Arjun

'புஷ்பா-தி ரூல் 2 : இப்படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா-தி ரூல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் அறிமுக டீசர் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மூன்று நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் புஷ்பா இரண்டாம் பாகத்தில் காளி வேடமணிந்து, காதில் கம்மல், வளையல் புடவை என ஆக்ரோஷமான காளியாகவே மாறியிருந்தார் அல்லு அர்ஜூன்.

Junior NTR asked to Birthday party with Allu Arjun

பார்ட்டி இல்லையா : இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் 41வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஒன்று திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதில் ஆர்ஆர்ஆர் புகழ் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜூனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு, வெறும் Hugs மட்டும் தானா? பார்ட்டி இல்லையா புஷ்பா என கேட்டுள்ளார். இதை ரசிகர்கள் வைரலாக்கி பார்ட்டி இல்லையா அல்லு என கேட்டு வருகின்றனர்.

டேவிட் வார்னர் வாழ்த்து : மேலும், அஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகரான இவர், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து காண்பித்து இரண்டாம் பாகத்திற்கு காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X