ஜூனியர் என்டிஆரின் வெறித்தனமான ரசிகர்… இவரே இத்தனை டிக்கெட் வாங்குனா... மத்தவங்க?
அமெரிக்கா: அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி உள்ள, ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யாவின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள்.

ஆர்.ஆர்.ஆர்.
பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தாக இயக்குனர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை பிரமாண்ட செலவில் உருவாகி உள்ளார். அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

முன்னணி நடிகர்கள்
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். டிவிவி தனய்யாவின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

400 கோடி செலவில்
பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். 400 கோடி வரையிலான செலவில். உருவாகி உள்ள இப்படம் ஜனவரி 7ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ஆனால் , கொரோனா தீவிரமானதால் படத்தை வெளியிட முடியாமல் போனது. தற்போது இத்திரைப்படம் 25ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.-
Recommended Video

அமெரிக்காவில் சுவாரசியம்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில் அமெரிக்காவில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசிக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் தீவிர ரசிகர் ஒருவர், டல்லாஸ், கேலக்ஸி தியேட்டரில், 75 டிக்கெட்டுகளை அப்படியே லாட்டாக புக் செய்துள்ளார். அமெரிக்காவில் இந்தியா படங்களுக்கு அதிகபட்சமாக 10 முதல் 15டிக்கெட்டுகள் மொத்தமாக வாங்கப்படும், 75 டிக்கெட் மொத்தமாக ஒரு ரசிகர் வாங்கி உள்ளது. அமெரிக்காவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications