உருக்கமாக நன்றி சொன்ன ஜூனியர் என்டிஆர்... ரசிகர்களின் அன்பில் திழைத்ததாக பெருமிதம்.
ஹைதராபாத் : கடந்த வெள்ளிக்கிழமை RRR திரைப்படம் உலகெங்கிலும் ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதுவரை வேறு எந்த படமும் செய்யாத வசூல் சாதனை செய்தது. ராஜமௌலியின் முந்தைய படமான பாகுபலி 2 செய்த அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.
RRR படத்தின் கதாநாயகர்களாக நடித்த ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் RRR ரிலீசுக்கு பிறகு Pan India நடிகர்களாக மாறி இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் RRR படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்களுக்கு மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக உருக்கமான ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

ராஜமௌலிக்கு நன்றி
அதில் முதலில் ராஜமௌலியை குறிப்பிட்டு நீங்கள் தந்த தன்னம்பிக்கையால் எண்ணில் இருக்கும் முழு திறமையை வெளிக்காட்ட முடிந்தது. என்னை தண்ணீர் போல ஆக்கி உங்களுக்கு தேவையானது போல மாற்றிக் கொண்டீர்கள். என்னை அந்த கதாபாத்திரமாக மாற்றினீர்கள். அதற்காக நன்றி என குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக ராம் சரணுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சகோதரா நீ இல்லாமல் RRR படத்தை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அல்லூரி சீதா ராமராஜ் கதாபாத்திரத்தில் உன்னைவிட்டால் வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது என உருக்கமாக எழுதியுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி
RRR படத்தில் நடித்த அஜய் தேவ்கன், ஆலியா பட், படத்தின் இசையமைப்பாளரான மரகதமணி, படத்தின் கதை ஆசிரியரான விஜயேந்திர பிரசாத், கேமராமேன் செந்தில்குமார், படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், படத்தின் தயாரிப்பாளரான DVV தானயா, மேலும் சில தொழில்நுட்பக் கலைஞர்களை குறிப்பிட்டு அவர்களது ஈடுபாட்டை மேற்கோள்காட்டி எழுதியுள்ளார்.

NTR’s Next
RRR படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் இமேஜ் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் என்டிஆர் மிக அழுத்தமாக பதிவாகியுள்ளது. இதனால் அவர் தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக உள்ளார். அதில் இரண்டு கதைகள் ஓகே செய்துள்ளதாக செய்திகள் பரவுகிறது. அதில் ஒன்று கொராடல சிவா இயக்கும் படம். மற்றொன்று
" உப்பனா " பட புகழ் புச்சி பாபு சனா இயக்கவிருக்கும் பீரியட் படம். இதில் என்டிஆர் கபடி வீரராக வருவார் என சொல்லப்படுகிறது.

Last but not least
ஜூனியர் என்டிஆர் வெளியிட்ட கடிதத்தில் RRR படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களை குறிப்பிட்டு கடைசியாக தனது ரசிகர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அதில், Last but not least எனது ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உங்கள் அளவில்லா அன்பும் ஆதரவும் என்னை மேலும் உற்சாகப்படுத்தி உழைக்க செய்கிறது என குறிப்பிட்டு இனிவரும் காலங்களில் இதுபோன்ற நல்ல படங்களை தந்து உங்களை மகிழ்விப்பேன் என சொல்லி முடித்துள்ளார். தற்போது இந்த கடிதம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











