ஜூனியர் என்டிஆரை சந்தித்த அனிமல் பட இயக்குநர்.. அடுத்தப்பட காம்பினேஷன் ரெடி?

மும்பை: நடிகர் ஜூனியர் என்டிஆர் தெலுங்குப்படவுலகில் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவரும் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக தேவரா படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 27ம் தேதி ரிலீசாகவுள்ளது.

கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள தேவரா படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட டீம் படத்தின் பிரமோஷன்களுக்கு திட்டமிட்டு வருகின்றனர். அனிருத் இசையில் படத்தின் அடுத்தடுத்த 3 பாடல்கள் வெளியான நிலையில் படத்தின் ட்ரெயிலர் நாளைய தினம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

junior ntr devara movie sandeep reddy vanga

ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆர் மிகப்பெரிய சினிமா பேக்கிரவுண்டில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த போதிலும் இவரது தனிப்பட்ட திறமைகளே இவரை சினிமாவில் நிலைத்து நிற்க வைத்துள்ளது. 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆர் 30 படங்களை தாண்டி நடித்து முடித்துள்ளார். இவரது 30வது படமாக தேவரா படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ள நிலையில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள தேவரா படத்தில் பாலிவுட் நாயகி ஜான்வி கபூர்ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியுள்ளார்.

தேவரா படம்: தேவரா படம் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சூப்பர்ஹிட்டடித்துள்ளன. இந்தப் பாடல்களில் ஜூனியர் என்டிஆர் -ஜான்வி கபூரின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளன. ரசிகர்கள் இந்த ஜோடியை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின்மூலம் தென்னிந்திய மொழிகளில் என்ட்ரி கொடுத்துள்ள ஜான்வி கபூர், அடுத்ததாக ராம்சரணுக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இவரது என்ட்ரி படமான தேவரா மிகப்பெரிய வரவேற்பை இவருக்கு ரிலீசுக்கு முன்னதாகவே பெற்றுக் கொடுத்துள்ளது.

junior ntr devara movie sandeep reddy vanga

நாளை வெளியாகும் தேவரா ட்ரெயிலர்: அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் நாளைய தினம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக ஜூனியர் என்டிஆர் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சிக்காக ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளனர். இந்த பிரமோஷன்களில் நடிகை ஜான்வி கபூரும் இணைந்துள்ளார். மிகவும் கலர்ஃபுல்லான உடையில் அவரது கெட்டப் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. தேவரா படத்தின் ட்ரெயிலருக்கு டோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், ட்ரெயிலர் ரசிகர்களை மிரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர் -சந்தீப் ரெட்டி வங்கா சந்திப்பு: இந்நிலையில் மும்பையில் நடைபெறும் இந்த பிரமோஷனல் நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் இணைந்துள்ளார். இந்நிலையில் படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆரையும் அவர் சந்தித்து பேசியுள்ளார். அடுத்ததாக பிரபாஸ் லீட் கேரக்டரில் நடிக்க ஸ்பிரிட் என்ற படத்தை இயக்கவுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் ஜூனியர் என்டிஆரை இயக்குவாரா என்று தற்போது ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் தற்போது இவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X