ரசிகருக்காக ஜூனியர் NTR செய்த சம்பவம்... பவுன்சர்களை விரட்டிய ட்ரெண்டிங் வீடியோ... ஏன்னு தெரியுமா?
ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆரின் 30வது திரைப்படம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.
முன்னதாக அவர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை பெற்றது.
ஆஸ்கர் விருது விழாவுக்குப் பின்னர் இந்தியா திரும்பிய ஜூனியர் NTR, ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது ரசிகருக்காக அங்கிருந்த பவுன்சர்களை ஜூனியர் NTR விரட்டிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

ஆஸ்கர் ஆட்ட நாயகன்
கொரட்டலா சிவா இயக்கும் NTR 30 படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. ஜூனியர் NTR ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. முன்னதாக அவர் நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. இதில் ஜூனியர் NTR, ராம் சரண் இருவரும் போட்ட ஆட்டம் தான், கோல்டன் குளோப் முதல் ஆஸ்கர் வரை நாட்டு நாட்டு பாடலை கொண்டு சென்றது.

பாய்ந்து வந்த ரசிகர்
இந்நிலையில், ஆஸ்கர் விருது விழாவிற்குப் பின்னர் இந்தியா திரும்பிய ஜூனியர் NTR, ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனையடுத்து அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர். ரசிகர்களின் உற்சாக குரலின் நடுவே பேசி முடித்த ஜூனியர் NTR, அதன்பிறகு அங்கிருந்து கிளம்பினார். அப்போது மேடையேறிய ரசிகர் ஒருவர் பவுன்சர்களுக்கு டிமிக்கி கொடுத்து ஜூனியர் NTR அருகே நெருங்க முயன்றார்.

பவுன்சர்களை விரட்டிய ஜூனியர் NTR
ஜூனியர் NTR-ஐ நோக்கி ரசிகர் வருவதை பார்த்து அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தாக்க முயன்றனர். இதனைப் பார்த்த ஜூனியர் NTR உடனே அங்கிருந்த பவுன்சர்களை விலக்கிவிட்டு அந்த ரசிகரை கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துக்கொண்டார். இதனைப் பார்த்ததும் பவுன்சர்கள ஷாக்காகிவிட்டனர். அதேபோல் அங்கிருந்த ரசிகர்களும் பயங்கர உற்சாகமாக கத்தி என்ஜாய் செய்தனர். ரசிகருக்காக ஜூனியர் NTR செய்த இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

விரைவில் அடுத்தடுத்த அப்டேட்
ரசிகருக்காக பவுன்சரை விரட்டிய வீடியோவை ஜூனியர் NTR-ன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜூனியர் NTR-ன் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஜூனியர் NTR ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கமிட் ஆகியுள்ளார். ஜான்வி கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டருடன் அறிவிப்பு செய்திருந்தது படக்குழு. NTR 30 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











