தேவராவுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனம்.. ஆடியன்ஸை குறை சொல்லும் ஜூனியர் என்.டி.ஆர்

ஹைதராபாத்: ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தேவரா. கொரட்டலா சிவா இயக்கியிருந்த அந்தப் படத்தில் ஜான்வி கபூர் தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக அறிமுகமானார். அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.இருந்தாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டதாம். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர். சினிமா குடும்பத்தின் பின்னணியில் இருந்து அவர் வந்திருந்தாலும் தன்னுடைய திறமையாலும், தனித்துவத்தாலும் இன்று இந்திய அளவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அவர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் ஆஸ்கர் ரேஸிலும் கலந்துகொண்டது.அந்தப் படத்துக்கு பிறகு மேற்கொண்டு ஃபேமஸாகிவிட்டார் ஜூனியர் என்.டி.ஆர். அவர் கடைசியாக கொரட்டலா சிவா இயக்கத்தில் தேவரா படத்தில் நடித்திருந்தார்.

junior ntr devara

இரண்டு பாகங்கள்: மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இப்படமானது கடந்த 27ஆம் தேதி வெளியானது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான் கிடைத்தது. ஜூனியர் என்.டி.ஆரின் ஆக்‌ஷன் ஓரளவு ரசிக்கும்படியாக இருந்தாலும் படத்தின் மேக்கிங்கோ, ஸ்க்ரீன் ப்ளேவோ சுத்தமாக எடுபடவில்லை என்று ஓபனாகவே பேசினர்.

இரண்டாவது பாகம் வேறயா?: மேலும் முதல் பாகமே இப்படி இருக்கிறதே இதில் இரண்டாவது பாகம் வேறு வரவிருக்கிறதா. அதையாவது ஒழுங்காக டெலிவர் செய்வார்களா என்றும் சமூக வலைதளங்களில் கேள்விகளை கேட்டுவருகின்றனர். இப்படி விமர்சன ரீதியாக படம் மொக்கை வாங்கினாலும் வசூலில் சக்கைப்போடு போடுவதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை அந்தப் படம் உலக அளவில் 460 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது விஜய் நடித்த GOAT படத்தின் வசூலைவிடவும் அதிகம் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் என்.டி.ஆர் பேட்டி: படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக வாங்கிய அடி ஜூனியர் என்.டி.ஆரை ரொம்பவே அப்செட்டாக்கியிருப்பதாக தெலுங்கு திரையுலகத்தில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு தேவரா விமர்சனம் பற்றி அளித்திருந்த பேட்டியில், "இப்போது ஆடியன்ஸாகிய நாம் ரொம்பவே எதிர்மறையாகிவிட்டோம். இனி ஒரு படத்தை அப்பாவித்தனமாக ரசிக்க முடியாது என்று தெரிகிறது.

குழந்தைகள் கவனிப்பதில்லை: நான் எனது குழந்தைகளுடன் தேவரா படம் பார்க்கும்போது அவர்களுக்கு ஹீரோ யார் என்றெல்லாம் கவலையில்லை. அப்பாவித்தனமாக ரசித்தார்கள். ஆனால் நாம் இனி அப்பாவித்தனமாக ரசிக்க முடியவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு படத்தையும் அலசுவதற்காகவே பார்க்கிறோம். நாம் அனைவரும் திரைப்படங்களை மதிப்பீடு, பகுப்பாய்வு செய்கிறோம். அதிகமாக சிந்திக்கிறோம்" என்றார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் என்ன ஜூனியர் சார் ஒழுங்கான கதையில் நடிக்காமல் எங்கள் மீது பழியை போடுகிறீர்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Read more about: junior ntr devara தேவரா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X