கீர்த்தி சுரேஷுக்கு தம்பியாகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்! - இது யாருனு தெரியுமா?
சென்னை : லிங்குசாமி இயக்கும் 'சண்டக்கோழி 2' படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தம்பியாக, 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பாவாஸ் நடிக்கவிருக்கிறார்.
இப்போதெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சிறுவர், சிறுமியர்கள் திறமையைக் காட்டி பிரபலங்கள் ஆகிவிடுகிறார்கள். சினிமாவிற்காக வாய்ப்புகளும் அவர்களைத் தேடி வந்துவிடுகிறது.

அப்படி ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2'-வின் டைட்டில் வின்னர் பாவாஸ். 5 லட்ச ரூபாய் பரிசு வென்ற இவருக்கு தற்போது சினிமா வாய்ப்பும் கிடைத்துள்ளது.
'சண்டக்கோழி 2' படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தம்பியாக நடிக்கிறாராம் பாவாஸ். இது பற்றி பாவாஸ், 'ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் இறுதிவரை வருவேன் என நினைக்கவில்லை.

வடிவேலு கேரக்டர் மட்டும் தான் எனக்கு செட்டாகும் என நினைத்தேன். ஆனால் எனக்கு எல்லா கேரக்டரும் செட்டாகிறது. ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த அனைவருக்கும் நன்றி. அவர்களின் அன்பு தான் 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்கும் வாய்ப்பு' என பாவாஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











