‘ஜுராசிக் பார்க்‘ நடிகர் சாம் நீல் உயிரிழந்தார்.. ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் உலுக்கிய மரணம்

சிட்னி: உலகளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்ட 'ஜுராசிக் பார்க்' படத்தில் நடித்த சாம் நீல் தனது 78-வது வயதில் சிட்னியில் உயிரிழந்தார். அவரது இந்தத் திடீர் மறைவு சர்வதேசத் திரை உலகையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

1947 ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்தில் பிறந்தவர் சாம் நீல். இவரின் உண்மையான பெயர் நைஜல் ஜான் டெர்மாட். சினிமாவிற்காக தனது பெயரை சாம் நீல் என மாற்றிக்கொண்டார். சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர் 1977ஆம் ஆண்டு வெளியான "ஸ்லீப்பிங் டாக்ஸ்" படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் வெற்றிப்படங்களில் நடித்த இவருக்கு திரும்புமுனையை தரும் படமாக இருந்தது. ஜுராசிக் பார்க். அந்த படத்தில் டாக்டர் ஆலன் கிராண்ட் ரோலில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமாகி, 'தி பியானோ' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கு ஆஸ்கர் விருதையும் வென்றார். பல வெற்றிப் படங்களில் நடித்துப் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக விளக்கும் சாம் நீல், பீக்கி பிளைண்டர்ஸ், தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர் போன்ற உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

Hollywood actor Sam Neill death
Photo Credit:

நடிகர் சாம் நீல்: ஹாலிவுட்டில் புகழின் உச்சியில் இருந்தாலும் எதார்த்தமான மனிதராக, ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையான மனிதாக வாழ்ந்து கொண்டிருந்த சால் நீல், உடல்நலக்குறைவு காணமாக உயிரிழந்தார். நடிகர் சாம் நீலின் மறைவை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரின் மறைவு முற்றிலும் எதிர்பாராதது ஒன்று என குறிப்பிட்டுள்ளனர். சாம் நீலின் திடீர் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Hollywood actor Sam Neill death
Photo Credit:

இரங்கல்: சாம் நீல் மறைவு குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நியூசிலாந்தின் கதைகளை உலகிற்கு எடுத்துச் சென்று, நமது திரைப்படத் துறையை மிகச்சிறந்த கலாச்சார ஏற்றுமதியாக மாற்றியவர் சாம் நீல். நகைச்சுவை உணர்வு மிக்கவர், ஆழ்ந்த சிந்தனையாளர். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார். மறைந்த நடிகர் சாம் நீல், கடந்த 2023-ஆம் ஆண்டில், தான் அறியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், தற்போது அவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X