மிரட்டலான ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன்... ஜூன் 10ல் ரிலீஸ்... புக் பண்ண தயாராயிட்டீங்களா?
சென்னை : ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூன் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்கான இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், படத்திற்கான புக்கிங்குகள் சில நகரங்களில் தற்போது ஆரம்பித்துள்ளன.

ஜூராசிக் பார்க் படம்
கடந்த 1993ம் ஆண்டில் ஜூராசிக் பார்க் படம் வெளியானது ஸ்டீவன் ஸ்பீல்பர்க். ஜூராசிக் படங்களின் வரிசையில் இதுவரை 5 படங்கள் வெளியாகி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களாக மாறியுள்ளன. இறுதியாக கடந்த 2018ல் ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வசூல்வேட்டையும் நடத்தியது.

ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் படம்
இந்நிலையில் தற்போது ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. இதையடுத்து படம் கடந்த மார்ச் மாதத்தில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு, தற்போது புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 10ல் ரிலீஸ்
வரும் ஜூன் 10ம் தேதி படம் ரிலீசாக உள்ளது. படத்தை காலின் டிரேவோர்ரோ இயக்கியுள்ளார். ஜூராசிக் வேர்ல்ட் -ஃபாலன் கிங்டம் படத்தின் அடுத்த பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் படத்தின் முன்பதிவு தற்போதே துவக்கப்பட்டுள்ளது.

ஜூராசிக் பார்க் இறுதிப்பகுதி
ஜூராசிக் பார்க் சகாப்தத்தின் இறுதிப்பகுதியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்தப் படத்தை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரிய திரையில் இந்தப்படத்தின் அனுபவத்தை ரசிப்பது இதுவே இறுதி முறையாக இருப்பது அவர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பதிவு துவக்கம்
இந்நிலையில் ரிலீசாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இந்தியாவின் குறிப்பிட்ட இடங்களில் இந்தப் படத்திற்கான முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியாவின் 60 நகரங்கள் மற்றும் 228 திரையரங்குகளில் இந்தப் படத்திற்கான முன்பதிவுகள் துவக்கப்பட்டுள்ளன.

சிறப்பான ட்ரெயிலர்
இந்தியாவின் மும்பை, புனே, கோவா, அகமதாபாத், டெல்லி, சூரத், இந்தூர், ஐதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இந்த முன்பதிவுகள் துவக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலரும் ரிலீசாகியுள்ள நிலையில், ஜூராசிக் பார்க் திரைப்படத்தின் மூன்று முக்கிய கதாபாத்திரங்களான டாக்டர் ஆலன் கிராண்ட், டாக்டர் எல்லீ சாட்லர் டாக்டர் இயான் மால்கம் ஆகியன இதிலும் காணப்படுகின்றன.

ரசிகர்கள் காத்திருப்பு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருநதது. இந்நிலையில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட இந்த திரை தொடருக்கு சிறப்பான பிரியா விடையை கொடுக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பிரியாவிடைக்கு காத்திருப்பு
அதுமட்டுமில்லாமல் திரை வரலாற்றில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்பட தொடருக்கு, ஒரு அற்புதமான பெரிய பிரியாவிடையை பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் 3D, IMAX 3D, 4DX & 2D-ல் படம் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











