"ஒத்தையில் நிக்கும் வேங்கையன் மவனோட" கடைசில மோதப் போவது டைனோசரா??

By Vignesh Selvaraj

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய டைனோசர்களைப் பற்றிய படமான 'ஜுராசிக் பார்க்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் வரிசையாக சில படங்கள் வெளியாகி உலக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்த வரிசையில் 2015-ம் ஆண்டு வெளிவந்த 'ஜுராசிக் வேர்ல்டு' படத்தின் அடுத்த பாகமாக வெளிவர இருக்கிறது 'ஜுராசிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்'. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Jurassic world fights with kaala

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பில் வெளிவர உள்ள இந்தப் படத்தை ஜே.ஏ.பயானோ இயக்குகிறார். இந்தப் படம் ஜுன் மாதம் 8-ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இப்படத்தைப் பார்க்க ஹாலிவுட் சினிமா பிரியர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி படம் ரிலீஸ் ஆவதால் தமிழில் வேறு படங்கள் வெளியாவது சந்தேகம் தான்.

ஆனால், அடுத்த நாளே 'ஜுராசிக் பார்க் : ஃபாலன் கிங்டம்' வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வசூலில் செம போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் பிரியர்களுக்கு இந்த டைனோசர் படம் தீனி போடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X