’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை IFFI-ல் வெளியிடுவதா? ஜூரி தலைவர் கடுமையான விமர்சனம்..வைரலாகும் ஹாஷ்டேக்

கோவா : தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம் என்று சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வுக்குழுத் தலைவர் நாடவ் லேபிட் தெரிவித்துள்ளார்.

"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த திரைப்படமாகும்.

இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் மற்றும் பாஷா சும்ப்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' அனைத்து முரண்பாடுகளையும் மீறி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகும். 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீரி பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியதே இப்படத்தின் கதையாகும். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சோகம் கரைபுரண்டு ஓடும். குறைந்த பட்ஜெட்டில் குறைந்த ப்ரோமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக் குவித்தது.

 தி காஷ்மீர் ஃபைல்ஸ் இழிவான படம்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் இழிவான படம்

இந்நிலையில், கோவாவில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் பேசிய ஜூரி மற்றும் விழா தலைவருமான நடவ் லாபிட், தி காஷ்மீர் பைல்ஸ் போட்டிப் பிரிவில் அனுமதித்ததற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். கௌரவம் வாய்ந்த இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த படத்தைப் பார்த்தது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகிறது என்றார். ஜூரி கூறிய கருத்து தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

280 படங்கள் திரையிடப்பட்டன

280 படங்கள் திரையிடப்பட்டன

கோவாவில் கடந்த 20ந் தேதி தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள் மற்றும் 20 திரைப்படம் சாராத படங்கள் ஒளிபரப்பப்பட்டன. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

சிரஞ்சீவிக்கு விருது

சிரஞ்சீவிக்கு விருது

இந்த திரைப்பட விழாவில் முதல் முறையாக சர்வதேச அளவில் வெற்றிப்பெற்ற ஓடிடி படங்கள் மற்றும் தொடர்களும் ஒளிபரப்பப்பட்டன. மேலும் இந்த ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X