Youth: 24 வயசு தான் ஆகுது.. யூத் நான் பார்த்து பார்த்து உருவாக்குன படம்.. கென் கருணாஸ் எமோஷனல்!

சென்னை: நடிகர் கென் கருணாஸ் யூத் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் கதையை அவரே எழுதி இயக்கியும் உள்ளார். இந்த படம் மார்ச் 19ஆம் தேதி ரிலீஸ் ஆவதை முன்னிட்டு, கென் கருணாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் மார்ச் 18ஆம் தேதி பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது, அவரது போஸ்ட்டில், " சினிமா... நான் அதன் மீது காதல் கொண்ட நாளிலிருந்து, மற்றதெல்லாம் மெல்ல மெல்ல இரண்டாம் பட்சம் ஆகிவிட்டது. சினிமா என்பதை நான் வெறுமனே பார்த்த ஒரு விஷயமாக மட்டும் இருக்கவில்லை... நான் வாழ்ந்த ஒன்றாகவே சினிமா மாறியுள்ளது, நானும் மாறி உள்ளேன்.

Just 24 amp amp Living His Dream Ken Karunas Gets Emotional About Youth Release

எனக்கு இப்போது வயது 24 தான்... ஆனால் என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வரை, சினிமா ஒன்றுதான் என்னுடன் எப்போதும் நீங்காமல் இருக்கிறது... ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு சந்தேகத்திலும், ஒவ்வொரு சிறு கனவிலும்... சினிமா ஒருபோதும் என்னை விட்டு விலகவில்லை. இனி வரும் காலத்தில் யூத் படத்திற்காக நான் வேலை செய்ய முடியாது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக, யூத் படம் என் சொந்தக் குழந்தை போல இருந்தது...

ஒவ்வொரு நாளும் நான் தூங்கி எழும்போது என்னுடன் இருந்தது. தூங்கும் போது யூத் படத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தேன். இன்னும் சொல்லப்போனால் ஒரு கதாநாயகனாக, நான் ஒரு அழகான கதையில் வாழ்ந்தேன். ஒரு இயக்குநராக, எனக்கான கதையைக் கண்டறிந்தேன்.

உத்வேகம்: ஒவ்வொரு காட்சியும் என் இதயத்தின் ஒரு துண்டிலும் உள்ளது. யூத் படத்தின் ஒவ்வொரு கணமும் என் வாழ்க்கையின் ஏதோ ஒரு பகுதியை வெளிப்படுத்துகிறது. அது என்னை உடைத்த நாட்களும் உண்டு, என்னை உருவாக்கிய நாட்களும் உண்டு. ஆனால் நான் இந்த கதையை உருவாக்க, இயக்க, நடிக்க என்னை தொடர்ந்து உத்வேகம் படுத்திக் கொண்டே இருந்தது.

Just 24 amp amp Living His Dream Ken Karunas Gets Emotional About Youth Release

நன்றிக்கடன்: ரசிகர்களான உங்களை மனதில் வைத்தே இந்தப் படத்தை உருவாக்கினேன்... நீங்கள் எப்படி உணர்வீர்கள், எங்கே சிரிப்பீர்கள், எங்கே உங்களை படத்துடன் பொருத்திp பார்த்துக் கொள்வீர்கள் என்று எப்போதும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். இதைச் சாத்தியமாக்க எண்ணற்ற அழகான உள்ளங்கள் இணைந்து பணியாற்றி உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இப்போது... நான் யூத் படத்தை உங்களிடம் விடுகிறேன்... என்னுடையதாக இருந்த யூத் இனி உங்களுடையது.

நம்பிக்கை: இதைப் நல்லபடியாக பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் நேசித்தது போல நேசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இன்னும் அதிகமாகவே நீங்கள் நேசிக்கலாம். யூத் உங்களுக்கு அவ்வளவு பிடிக்கலாம். இது உங்களை மகிழ்விக்கும், உங்களுடன் நிலைத்திருக்கும், நீங்கள் என்றும் நினைத்துப் பார்க்க ஒரு அழகான அனுபவத்தை தரும் என்று நம்புகிறேன். சினிமாவை நேசித்த ஒரு குழந்தையிலிருந்து... இந்தத் தருணம் வரை. நாளை பார்க்கலாம்... கடவுளுக்கு நன்றி!! (யூத் படத்தை விடுவது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். ஆனால் அது உங்களை வந்தடைகிறது என்பது இந்த கணத்தை அழகாக மாற்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X