twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'லஷ்மியை விடுங்கப்பா... பெருமைக்குரிய மதிவதனியைப் பத்திப் பேசுங்க!'

    By Shankar
    |

    Recommended Video

    நயன்தாராவின் அறம் விமர்சனம்- வீடியோ

    கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத் தளங்கள், செய்தித் தளங்களில் லஷ்மி குறும்படத்தைப் பற்றிய பேச்சுகள், விவாதங்கள், செய்திகள்தான்.

    கணவனுக்குப் போட்டியாக லஷ்மி இன்னொருவருடன் படுக்கையைப் பகிர்ந்தது சரியா.. இதுதான் பெண்ணுரிமையா? என்று ஒரு பக்கமும், இப்படிக் கேட்பதுதான் ஆணாதிக்கம் என்று இன்னொரு பக்கம் விவாதம் ஓடிக் கொண்டிருந்தது.

    மதிவதனி

    மதிவதனி

    நேற்று அறம் படம் வெளியானது. அதில் மதிவதனி ஐஏஎஸ் ஆக வாழ்ந்திருந்தார் நயன்தாரா. வணிக சமாச்சாரங்கள் இல்லாத சினிமாவாக உருவாக்கியிருந்தார்கள். மார்க்கெட்டின் உச்சத்திலிருக்கும் நயன்தாரா, சமூக அக்கறை கொண்ட ஒரு புரட்சிக் கதையில், மக்களுக்கான அரசியல் பேசி நடித்ததை அனைவருமே பாராட்டியுள்ளனர்.

    லஷ்மிகள் அல்ல

    லஷ்மிகள் அல்ல

    "தமிழ் சமூகத்துக்கும் சினிமாவுக்கும் தேவை லஷ்மிகள் அல்ல... மதிவதனிகள்தான். ஒரு ஆண் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தால், அதே மாதிரி அவன் மனைவியும் செய்யலாம் என்பதெல்லாம் ஒரு வாதமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர் வலைவாசிகள்.

    பெருமை

    பெருமை

    "இப்போது நாம் பேசவேண்டியது லஷ்மிகளைப் பற்றியல்ல. பெருமைக்குரிய மதிவதனிகளைப் பற்றித்தான். மதிவதனி என்ற பெயரே தமிழ் சமூகத்தைப் பெருமைப்படுத்தும் ஒரு குறியீடுதான். அந்தப் பெயரில் நடித்திருக்கும் நயன்தாரா பெண்களுக்கே பெருமை சேர்த்துள்ளார். சிறுமைக்குரிய லஷ்மிகளை விட்டுவிட்டு, பெருமைக்குரிய மதிவதனிகள் பற்றிப் பேசுங்க," என்று பலரும் நிலைத் தகவல்களை வெளியட்டு வருகின்றனர்.

    கொண்டாடுங்கள்

    கொண்டாடுங்கள்

    படத்தின் இறுதிக் காட்சியில், "அடிமைகளுக்கு இன்னொரு அடிமை சேவகம் செய்ய முடியாது. நான் மக்களுடன் இருந்து அவர்களுக்கான தேவையை நிறைவேற்றப் போகிறேன். அதற்கான அதிகாரத்தை மக்கள் தருவார்கள்..," என்று கூறிவிட்டு வெளியில் வருவார் நயன்தாரா. அப்போது 'மதிவதனியாகிய நான்...' என பதவி ஏற்புக் குரல் ஒலிக்கும். அதைக் குறிப்பிட்டு, நியாயம், நேர்மை, மக்களை மதிக்கும் ஒரு பெண்ணால் அரசியலையே மாற்ற முடியும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் மதிவதனிகளைக் கொண்டாடுங்கள் என்று சமூக வலைத் தளங்களில் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.

    English summary
    Social Media now celebrating Mathivadhani, Aramm movie heroine's character name and appealed to leave Lakshmi (Short Film)
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X