வெறித்தனம் ஓவர்லோடட்.. ஜோதிகாவுக்கு 44 வயசுன்னு சொன்னா நம்பவே முடியல.. என்னவொரு வொர்க்கவுட்!
சென்னை: கணவர் சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு ஃபிட்னஸ் ஃப்ரீக்காக மாறி உள்ளார் நடிகை ஜோதிகா.
தனது 44வது பிறந்தநாளை முன்னிட்டு ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கிரண், மஞ்சிமா மோகன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் ஜோதிகாவின் உடற்பயிற்சி வீடியோவை பார்த்து ஃபயர் போட்டு வருகின்றனர்.

தேசிய விருது வாங்கிய ஜோதிகா
நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா கணவருடன் இணைந்து 2டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். சூரரைப் போற்று திரைப்படம் 6 தேசிய விருதுகளை அள்ளிய நிலையில், சிறந்த படத்திற்கான தேசிய விருதை தயாரிப்பாளர் என்கிற முறையில் நடிகை ஜோதிகா சமீபத்தில் வாங்கினார். சூர்யா அந்த தருணத்தை புகைப்படம் எடுத்தது எல்லாம் சோஷியல் மீடியாவில் டிரெண்டானது.

மம்மூட்டிக்கு ஜோடியாக
தயாரிப்பு பணிகள் மட்டுமின்றி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா. தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி நடிக்க உள்ள காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை மம்மூட்டி வெளியிட்டார்.

வெறித்தனமான வொர்க்கவுட்
மம்மூட்டி படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை ரொம்பவே குறைத்து வரும் நடிகை ஜோதிகா, அதற்காக தான் செய்து வரும் வெறித்தனமான வொர்க்கவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். பிரபல செலிபிரிட்டி ஃபிட்னஸ் டிரைனர் மகேஷ் கனேக்கரிடம் பயிற்சி பெற்று வருகிறார் ஜோதிகா.

வித்தை காட்டும் ஜோ
பேரழகன் படத்தில் வித்தைக் காட்டும் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார் ஜோதிகா. அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு கைகளை ஊன்றி படிக்கட்டில் நடப்பது, ஸ்டூல் மீது, பாக்ஸிங் பேக் மீது கால் வைத்து தலைகீழாக நடப்பது எல்லாம் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது.

கணவருக்கு போட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து ஃபிட்னஸ் ஃப்ரீக்காக மாறினார் சூர்யா. இந்நிலையில், சூர்யாவுக்கே செம டஃப் காம்படிஷனை கொடுக்கும் அளவுக்கு ஜோதிகா வெறித்தனமாக செய்து வரும் உடற்பயிற்சியை பார்த்து நடிகைகள் கிரண், மஞ்சிமா மோகன் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலரும் லைக் பண்ணி கமெண்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











