twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Justice for George Floyd: இரக்கமே இல்லையா.. கழுத்தை நெரித்துக் கொன்ற போலீசார்.. குவிகிறது கண்டனம்

    |

    மினியாபோலிஸ்: George Floyd எனும் 46வயது நபரை அமெரிக்க போலீசார் காலால் நெரித்துக் கொன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    வல்லரசு நாடு என மார்தட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவில், இன்னமும் கருப்பு, வெள்ளை எனும் இன பிரச்சனை கொஞ்சம் கூட ஒழியவில்லை.

    கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு நடுவே, தற்போது நடைபெற்று இருக்கும் மனித தன்மையற்ற வன்முறைக்கு கரினா கபூர் முதல் கிம் கர்தாஷியன் வரை கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    போலி செய்தி.. போட்டுத்தாக்கிய அர்ச்சனா அக்கா.. கொண்டாட்டத்தில் புள்ளிங்கோ.. பிகில் லாபம் தானாம்!போலி செய்தி.. போட்டுத்தாக்கிய அர்ச்சனா அக்கா.. கொண்டாட்டத்தில் புள்ளிங்கோ.. பிகில் லாபம் தானாம்!

    பதற வைக்கும் வீடியோ

    பதற வைக்கும் வீடியோ

    ஒரு சாமானிய கருப்பின மனிதரை ஒரு போலீஸ் அதிகாரி தனது முட்டிக் காலால் கழுத்து நசுக்கி கொலை செய்யும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தையே உலுக்கிப் போட்டு இருக்கிறது. அந்த சம்பவத்திற்கு மேலும் 3 போலீசார் அருகில் நின்று வேடிக்கை பார்ப்பது நிற வெறியை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.

    மூச்சு விட முடியல

    மூச்சு விட முடியல

    அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்து போலீசார் George Floyd எனும் அந்த நபரை கார் டயருக்கு அடியில் படுக்க வைத்து யாரும் பார்க்காத வண்னம், கழுத்தை நெரித்து சாகடிக்கிறார். கடைசி மூச்சு இருக்கும் வரை, தன்னால் சுவாசிக்க முடியவில்லை என கதறும் ஜார்ஜின் குரல்கள் கேட்பவர்கள் நெஞ்சை நிலை குலைய செய்கிறது.

    கரினா கபூர் கண்டனம்

    கரினா கபூர் கண்டனம்

    டைம் இதழின் அட்டை படத்தை பதிவிட்டு 1968ம் ஆண்டு, 2015 மற்றும் தற்போது 2020 என எப்போதும் கருப்பின மக்களுக்கு எதிரான அநீதி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த மே 25ம் தேதி போலீஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கிம் கர்தாஷியன் கண்டனம்

    கிம் கர்தாஷியன் கண்டனம்

    பிரபல மாடல் அழகியான கிம் கர்தாஷியன் இந்த கொடூரமான சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். ஜார்ஜ் கொலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும், ஜார்ஜ் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அமெரிக்காவில் போராட்டங்கள் எழுந்துள்ளன.

    எல்லா நிறமும் அழகுதான்

    எல்லா நிறமும் அழகுதான்

    வெள்ளை நிறம் மட்டுமே இந்த உலகில் அழகு கிடையாது. அனைத்து நிறங்களுமே அழகு தான் என்ற வாசகங்களுடன் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன வெறிக்காக கொலை செய்யப்பட்ட ஜார்ஜின் மரணத்துக்காக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு நிறம், ஒரு இனம், ஒரு மதம் மட்டுமே உயர்ந்தது என்னும் மன நிலை எப்போது தான் மாறுமோ என்று தெரியவில்லை.

    English summary
    George Floyd lost his life to brutal police violence. Here's how Kareena Kapoor Khan and other celebs are reacting to his tragic death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X