twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரக்கமின்றி கொல்லப்பட்டார் ஜார்ஜ்.. நிற வெறியால் இனி ஒரு உயிரும் போகக் கூடாது.. பிரியங்கா குரல்!

    |

    மினியாபோலிஸ்: George Floyd கொல்லப்பட்ட சம்பவம் வீடியோவாக வைரலான நிலையில், தற்போது ஜார்ஜ் கொலைக்கு எதிராக நடிகை பிரியங்கா சோப்ரா குரல் கொடுத்துள்ளார்.

    முன்னதாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் மாடல் அழகி கிம் கர்தாஷியன், பிரபல அமெரிக்க பாடகி கார்டி பி உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள், கருப்பின மக்களுக்கு எதிராக வெள்ளை நிற போலீசார் நடத்திய கொடூரமான செயலை கண்டித்து கருத்து தெரிவித்து இருந்தனர்.

    அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் கடந்த மே 25ம் தேதி ஜார்ஜ் ஃப்ளாய்டு காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக் காலால் நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலகத்தையே உலுக்கி இருக்கிறது.

    வெடித்தது போராட்டம்

    வெடித்தது போராட்டம்

    பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கும் வெள்ளை இன மக்களுக்கும் இடையே இன வெறி சண்டை எழுந்து வருகிறது. ஆஸ்கர் விருது வென்ற 12 years of Slave உள்ளிட்ட பல படங்களில் வெள்ளையர்களின் ஆதிக்க வெறியை படம் பிடித்து காட்டியிருப்பார்கள். இந்நிலையில், தற்போது நடந்த இந்த கொடுரமான கொலை சம்பவத்தால் கருப்பின மக்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

    கொரோனா காலத்திலும்

    கொரோனா காலத்திலும்

    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் தான் அதிகளவு இருக்கிறது. கிட்டத்தட்ட 17 லட்சம் மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த நேரத்திலும் மனிதாபிமானமே இல்லாமல் இப்படியொரு சம்பவம் நடைபெற்று இருப்பது சகல மானவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

    மூச்சு விட முடியல

    மூச்சு விட முடியல

    நிற வெறியால் இப்படியொரு இழிவான செயலை போலீஸ் அதிகாரிகளே செய்துள்ள நிலையில், ஜார்ஜ் கடைசியாக சொன்ன மூச்சு விட முடியல ‘I can't breathe' என்ற வார்த்தையை பல பிரபலங்களும் பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த போலீஸ் அதிகாரிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கையெழுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பிரியங்கா கண்டனம்

    பிரியங்கா கண்டனம்

    முன்னணி பாலிவுட் நடிகை கரினா கபூர் சில தினங்களுக்கு முன்பு ஜார்ஜ் கொலைக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ராவும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் பல இருக்கின்றன. அறிவாளிகள் என நினைத்துக் கொண்டிருக்கும் பலரும் இந்த விவகாரத்தில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.

    ஒரு உயிரும் போகக் கூடாது

    ஒரு உயிரும் போகக் கூடாது

    நிற வெறி காரணமாக இனி ஒரு உயிரும் போகக் கூடாது. கழுத்து நெரிக்கப் பட்டு ஜார்ஜ் ஃப்ளாய்டு துடி துடிக்க செத்தபோது, அதை தடுக்காமல் அருகில் நின்று வேடிக்கை பார்த்த போலீஸார் உள்பட அந்த பாதக செயலை அந்த போலீஸ்காரருக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரை இந்த போராட்டம் நிற்கக் கூடாது.

    தண்டனை கொடுக்கணும்

    தண்டனை கொடுக்கணும்

    ஜார்ஜ் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல், உங்களுக்காக எப்போதுமே நான் துணை நிற்பேன். ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா, "Text "FLOYD" to 55156 " என்ற எண்ணை குறிப்பிட்டு கையெழுத்து இயக்கத்திற்கும் ஆதரவு திரட்டியுள்ளார்.

    English summary
    Bollywood actress Priyanka Chopra took to Instagram to share a moving post in support of George Floyd. She talked about how everyone needs to be responsible.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X