அடேங்கப்பா... மீசையை ஷேவ் பண்ண 160 கோடியா? - ஹாலிவுட் அட்ராசிட்டி!

By Vignesh Selvaraj

சென்னை : சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியான 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தில் நடித்த ஹென்றி கவிலின் மீசையை நீக்குவதற்காக 160 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படங்கள் எந்த லெவலில் எடுக்கப்படும் என்பது ஹாலிவுட் சினிமா பிரியர்களுக்கு நன்கு தெரியும். சமீபத்தில் வெளியாகி பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்த படம் 'ஜஸ்டிஸ் லீக்'.

இதில் சூப்பர் மேனாக நடித்தவர் ஹென்றி கவில். இந்தப் படத்தில் அவர் மீசையை கிளீன் ஷேவ் செய்திருப்பார். இதை ஷேவ் பண்ணத்தான் 160 கோடி ரூபாய் செலவாம்.

ஹென்றி கவில்

ஹென்றி கவில்

'ஜஸ்டிஸ் லீக்' படத்தில் சூப்பர் மேனாக ஹென்றி கவில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் இவரது மீசையை CGI மூலம் நீக்குவதற்காக 25 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் 160 கோடி ரூபாய் வீணாகியிருக்கிறது.

மிஷன் இம்பாசிபிள் 6

மிஷன் இம்பாசிபிள் 6

'மிஷன் இம்பாசிபிள் 6' படத்தில் நடிக்கும் கேரக்டரில் நடிக்க மீசை வைக்க வேண்டிய கட்டாயமாம். மீசையில்லாமல் நடிக்க 'மிஷன் இம்பாசிபிள் 6' படக்குழு அனுமதிக்கவில்லையாம். எனவே ஹென்றி மிஷன் இம்பாசிபிள் படம் முழுக்க மீசையுடன் நடித்திருப்பார்.

மீசை ஷேவ்

மீசை ஷேவ்

ஆனால் 'ஜஸ்டிஸ் லீக்' படத்தில் அதே லுக்கில் தான் நடித்து இருந்ததால் இப்படக்குழு படத்தில் அவரின் மீசையை CGI கிராஃபிக்ஸ் மூலம் நீக்கி கிளீன் ஷேவ் போல் காட்டியிருக்கிறார்கள்.

160 கோடி செலவு

160 கோடி செலவு

இதற்காக அவர்கள் செலவு செய்த தொகை நம் நாட்டு மதிப்பில் ரூ 160 கோடி. அதாவது $25 மில்லியன். மீசைக்கு இத்தனை கோடியா... பெரிய அக்கப்போராகவல்லவா இருக்கிறது என ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

More from Filmibeat

Read more about: computer graphics
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X