twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்களுக்கு தமிழ் தெரியும்ல.. தமிழிலேயே பேசுங்க.. விஷாலுக்கு நீதிபதி அட்வைஸ்!

    |

    Recommended Video

    Nadigar Sangam Election 2019: மாவட்ட பதிவாளருக்கு நன்றி தெரிவித்த விஷால் - வீடியோ

    சென்னை: வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலை தமிழில் பேசும்படி நீதிபதி அறிவுறுத்தினார்.

    கடந்த 2016ஆம் ஆண்டு விஷாலின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சேவை வரித்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்கள் சிக்கியதால் விஷாலுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    ஆனால் இதுதொடர்பாக விஷால் தரப்பில் இருந்து எந்த பதிலும் விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து விஷால் மீது அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் என்ற பிரிவின் அடிப்படையில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    சினிமா வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் பயிற்சி வகுப்புசினிமா வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் பயிற்சி வகுப்பு

    விளக்கம்

    விளக்கம்

    இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2018 -ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் பல முறை அவர் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார்.

    ஆஜாரான விஷால்

    ஆஜாரான விஷால்

    இந்நிலையில் நடிகர் விஷால் இன்று மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷால், இன்று காலை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    ஆங்கிலத்தில் பதில்

    ஆங்கிலத்தில் பதில்

    அப்போது கடந்த சம்மனில் ஏன் ஆஜராகவில்லை என்று நீதிபதி மலர்மதி விஷாலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆங்கிலத்தில் பதிலளிக்க தொடங்கினார் விஷால்.

    தமிழிலேயே பேசுங்கள்

    தமிழிலேயே பேசுங்கள்

    அப்போது குறிக்கிட்ட நீதிபதி மலர்மதி உங்களுக்கு தமிழ் தெரிந்தால் நீங்கள் தமிழிலேயே பதில் கூறலாம் என்று நடிகர் விஷாலுக்கு அறிவுறுத்தினார்.

    English summary
    Justice Malarmathi adviced Actor Vishal to talk in Tamil in court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X