Don't Miss!
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Sports
"ஆமா.. தோனி மாதிரி தான் செய்றேன்" ஹர்திக் பாண்ட்யா மீது எழுந்து வந்த குற்றச்சாட்டு.. தடாலடி பதில்!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கொடூரமான தண்டனை கொடுக்கணும்.. ப்ரூனோவை மீன் முள்ளால் மாட்டிக் கொன்ற விவகாரம்.. கொதிக்கும் நடிகைகள்
சென்னை: கேரளாவில் 3 இளைஞர்கள் ப்ரூனோ எனும் செல்ல நாய்க்குட்டியை அடித்தும் மீன் முள்ளால் மாட்டியும் சித்ரவதை செய்து கொன்ற விவகாரம் நேற்று காட்டுத் தீ போல சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த கொடூர செயலை கண்டித்து பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட், அனுஷ்கா ஷர்மா மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
#JusticeForBruno என்ற ஹாஷ்டேக்கையும் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பாலிவுட்
நடிகர்
நசீருதின்
ஷாவிற்கு
நிமோனியா...
மருத்துவமனையில்
அனுமதி

கொல்லப்பட்ட ப்ரூனோ
திங்கட்கிழமை காலை கடற்கரையில் வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்த செல்ல நாய்க்குட்டி ப்ரூனோவை மூன்று இளைஞர்கள் மீன் பிடிக்க உதவும் முள்ளால் மாட்டி சித்தரவதை செய்துள்ளனர். மேலும், கட்டையை வைத்து கொடூரமாக அடித்தும் கொலை செய்துள்ளனர்.

வழக்கு தொடுத்த உரிமையாளர்
தனது லாபரடார் வகை நாய்க்குட்டியான ப்ரூனோவை கொடுரமாக கொன்ற செய்தி அறிந்த அதன் உரிமையாளர் சிஸ்துராஜ் திருவனந்தபுரத்தில் உள்ள விழினம் காவல் நிலையத்தில் மூன்று இளைஞர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். 22,22 மற்றும் 28 வயதான நபர்கள் இந்த கொடூர செயலை செய்துள்ளனர்.

தீயாய் பரவியது
சமூக வலைதளங்களில் #JusticeForBruno என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நெட்டிசன்கள் இந்த விவகாரத்தை தீயாக பரப்பினர். செல்லப் பிராணியான ப்ரூனோவின் புகைப்படமும் வைரலாக ஷேர் செய்யப்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

ஆலியா பட் ஆத்திரம்
ரொம்ப அறுவருப்பா இருக்கு, இளைஞர்கள் இப்படியொரு இழி செயலை செய்வார்களா என பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது கடுமையான கண்டனங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், இதோடு அவர்கள் நிறுத்த மாட்டார்கள், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அனுஷ்கா ஆதங்கம்
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மான்ஸ்டர்ஸ் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அனுஷ்கா ஷர்மாவின் பதிவுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த கொடூர கொலைகாரர்களை ஈவு இரக்கமற்ற மிருகங்களை சும்மா விடக் கூடாது என கமெண்ட் செய்துள்ளனர்.

கடுமையான தண்டனை
#JusticeForBruno ஹாஷ்டேக்கை ஷேர் செய்த நடிகை திஷா பதானி, கண்டிப்பா அந்த கயவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தக்க தண்டனை பெறுவார்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும், நடிகை மலைகா அரோரா உள்ளிட்ட பலரும் ப்ரூனோவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.