திடீரென ட்விட்டரில் தீயாய் ட்ரெண்டான #JusticeforJallikattu ?? பின்னணியில் மாஸ்டர் விஜய்!
Recommended Video
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களுக்காக குரல் கொடுத்த நடிகர் விஜய்யின் ட்விட்டர் வீடியோ 1 மில்லியன் வியூக்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
அதனை கொண்டாடும் விதமாக தளபதி ரசிகர்கள் #JusticeforJallikattu என்ற ஹாஷ்டேக்கை தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ஒரு குட்டி கதை' நாளை வெளியாகவுள்ள நிலையில், தற்போது இந்த ஹாஷ்டேக் தீயாய் பரவி வருகிறது.
புதிய மைல்கல்
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கைது செய்ததற்கு எதிராக நடிகர் விஜய் தனது ட்விட்டரில் வீடியோ பதிவு மூலம் குரல் கொடுத்திருந்தார். அந்த வீடியோ தற்போது ஒரு மில்லியன் வியூஸை கடந்துள்ளது.

வெளிய அனுப்’பீட்டா’
அந்த வீடியோவில், கலாசாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கத் தான் சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக போராடிய மாணவர்களை கைது செய்தது தவறு என்றும், இது சம்பந்தமா கைது செய்யப்பட்டவங்களை அனுப்'பீட்டா' நான் சந்தோஷப்படுவேன் என பீட்டாவுக்கு எதிராகவும் நேரடியாக குரல் கொடுத்திருந்தார்.

இந்தியளவில் டிரெண்டிங்
நடிகர் விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் பேசிய அந்த வீடியோ தற்போது ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் #JusticeforJallikattu என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ள நிலையில், தற்போது இது டிரெண்டாகி வருகிறது.
புதிய சாதனை
தளபதி விஜய் 2017ல ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவா ஒரு வீடியோ ட்வீட் பண்ணியிருப்பாரு, அந்த வீடியோ, இப்ப வரைக்கும் ஒரு மில்லியன் வியூஸ் வந்துருக்கு, அதுவும் இல்லாம, 1 லட்சத்து 78 ஆயிரம் லைக்ஸ் மற்றும் 73 ஆயிரம் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இப்படி தினமும் ஒவ்வொரு சாதனையா தளபதி ரசிகர்கள் உருவாக்கிட்டு இருக்கோம் என இந்த ரசிகர் தெளிவா விளக்கி இருக்கார்.
முதல் குரல்
தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா முதல் குரல் எங்க அண்ணாவோட குரலாத்தான் இருக்கும். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுலையும் நடிகர் விஜய்யின் மாஸ் ஸ்பீச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். நாளை விஜய் குரலில் அனிருத் இசையில், வெளியாகவுள்ள ஒரு குட்டி கதை பாடல், எத்தனை புதிய சர்ச்சைகளை வரப் போகிறதோ தெரியவில்லை.. பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











