»   »  பாகுபலி 2 பிரச்சனை: சத்யராஜுக்காக தம் கட்டி ட்விட்டரில் குரல் கொடுக்கும் தமிழர்கள்

பாகுபலி 2 பிரச்சனை: சத்யராஜுக்காக தம் கட்டி ட்விட்டரில் குரல் கொடுக்கும் தமிழர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 பட பிரச்சனைக்கு இடையே #JusticeForSathyaraj என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

காவிரி பிரச்சனையின்போது கன்னடர்களை தவறாக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என கன்னட அமைப்புகள் ஒன்று கூடியுள்ளன.

இந்நிலையில் #JusticeForSathyaraj என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

சத்யராஜ்

2008 சத்யராஜ் பேசுனதுக்கு 2017 மன்னீப்பு கேக்கனும் சொல்றிங்க பாகுபலி 1 வந்த அப்பவே ஏன் இந்த கோரிக்கைய வைக்கல சில்லறைகளா #Justiceforsathyaraj

தமிழ்நாடு

சத்யராஜை மன்னிப்பு கேக்க சொன்னதுக்கு கன்னடனுங்க மன்னிப்பு கேக்கலைன்னா தமிழ்நாட்டுல படத்தை ரிலீஸ் பண்ணவிட கூடாது.#BanBahubali2 #SaveSathyaraj

9 ஆண்டுகள்

சத்யராஜ் பேசி 9 ஆண்டுகளாகிவிட்டது. கர்நாடகாவில் அவரின் 30 படங்கள் ரிலீஸாகியுள்ளன. திடீர் என பாகுபலி 2 படத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? #JusticeforSathyaraj #DirtyPolitics

வாட்டாள் நாகராஜ்

இந்த வெளிநாட்டு விநோதம் தான் வாட்டாள் நாகராஜா நல்லா காமெடியா இருக்கான்
#Justiceforsathyaraj

கோமா

#JusticeForSathyaraj என்ன? 8 ஆண்டுகள் கழித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமா? நீங்கள் எல்லாம் கோமாவில் இருந்தீர்களா? மெச்சூர் ஆகுங்க கன்னடர்களே.

பாகுபலி 2

சத்யராஜ் மன்னிப்பு கேட்காமல் பாகுபலி வெளிவராது-மூடர்கூடம்
கண்ணாடிய திருப்புனா எப்டிடா ஆட்டோ ஓடும் முட்டாள்ஸ் #பாகுபலி2 #Justiceforsathyaraj

English summary
#JusticeForSathyaraj is trending on twitter at a time Kannada organisations are asking Sathyaraj to apologise for talking against Kannadigas during Cauvery protest.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil