உங்கள் கட்டளையே சாசனம்.. விஜய் சொன்னதை செய்து காட்டிய ரசிகர்கள்.. தேசிய அளவில் டிரெண்டாகும் டேக்!

சென்னையில் விபத்தில் பலியான சுபஸ்ரீ குறித்து பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

Recommended Video

Bigil audio launch|சொன்னபடி செய்து காட்டிய விஜய் ரசிகர்கள்... பாராட்டிய பொதுமக்கள்

சென்னை: சென்னையில் விபத்தில் பலியான சுபஸ்ரீ குறித்து பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது பெரிய வைரலாகி உள்ளது. இதையடுத்து சுபஸ்ரீக்கு நீதி வேண்டி, #JusticeForSubaShree என்ற டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

நேற்று சென்னையில் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் அரசியல் குறித்தும் சமுதாய பிரச்சனை குறித்தும் பேசினார்.

நடிகர் விஜய் தனது பேச்சில், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது. இதில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது யாருமே கோபம் கொள்ளவில்லை.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

தேவையில்லாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் புகார் கூறுகிறார்கள். இவர்களுக்கு எதிராக நீங்கள் ஹேஷ்டேக் போடுவீர்கள் என்று நம்புகிறேன். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் போராட வேண்டும். சமுதாயத்தின் நலனுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன், என்று விஜய் பேசினார்.

என்ன டிரெண்ட்

என்ன டிரெண்ட்

இவரின் பேச்சு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து சுபஸ்ரீக்கு நீதி வேண்டி, #JusticeForSubaShree என்ற டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த டேக் தற்போது தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் இது உலக அளவில் டிரெண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி வேண்டுகோள்

இது தளபதியின் வேண்டுகோள்.. இதை எவ்வளவு வைரலாக்க முடியுமோ, அவ்வளவு வைரலாக்க வேண்டும் என்று இவர் டிவிட் செய்துள்ளார் .

உங்கள் விருப்பம்

உங்கள் விருப்பமே எங்களின் கட்டளை.. நீங்கள் சொன்னபடி செய்துவிட்டோம்!, என்று இவர் விஜயிடம் கூறியுள்ளார்.

என்ன தொடக்கம்

இது வெறும் தொடக்கம்தான், இனிமேல் சமுதாயத்தில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கு நாங்கள் டேக் உருவாக்கி தெறிக்க விடுவோம். அதற்கு சின்ன எடுத்துக்காட்டுதான் இது. அந்த பெண்ணிற்கு சரியாக நீதி கிடைக்க வேண்டும்.

என்ன நடக்க போகிறதோ

அலட்சிய அதிகாரிகள், கையாலாகாத அரசியல்வாதிகள் இவர்களால் இன்னும் என்ன என்ன நடக்க போகிறதோ. என்று இவர் டிவிட் செய்துள்ளார்.

அவரின் பேச்சு

தளபதி பேச்சுக்கு மறு பேச்சு இல்லை.. அவர் வழியில் நியாயத்துக்காக.. சகோதரியின் இழப்புக்கு நீதி வேண்டும், என்று இவர் டிவிட் செய்துள்ளார்.

இதுதான் முதல்படி

ஒரு உசுரோட மதிப்பு இங்கே யாருக்கும் தெரியலை.. இந்த நிலைமை இனி மாறும்.. அதற்கான முதல் படி இதுவாகத்தான் இருக்கும், என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X