கல்யாண கலைக்கட்டிடுச்சே.. ஸ்பின்ஸ்டர்ஸ் பார்ட்டியில் ரகளை செய்யும் பிரபல தமிழ் நடிகரின் காதலி!
சென்னை: பிரபல தமிழ் நடிகரின் காதலி தனது தோழிகளுடன் ஸ்பின்ஸ்டர்ஸ் பார்ட்டி கொண்டாடிய போட்டோ வைரலாகி வருகிறது.
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. இவரும் பிரபல நடிகரான விஷ்ணு விஷாலும் காதலித்து வருகின்றனர்.
ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

காதல் கிசுகிசு
இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் அடிக்கடி நைட் பார்ட்டிகளில் பங்கேற்பது, வெளியில் ஒன்றாக சுற்றுவது, என நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.

காதல் உறவு
ஆனால் அதுகுறித்து இருவரும் வாயே திறக்காமல் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஜூவாலா கட்டாவுடன் காதல் உறவில் இருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார் நடிகர் விஷ்ணு விஷால்.

நள்ளிரவில் நிச்சயதார்த்தம்
டேட்டிங்கில் உள்ள இருவரும் அவ்வப்போது தங்களின் போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளில் இருவரும் நள்ளிரவில் மோதிரம் மாற்றி வீட்டிலேயே தங்களின் நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டனர்.

மாலத்தீவில் ஜாலி
இதனை தொடர்ந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அண்மையில் இருவரும் மாலத்தீவில் தங்களின் ஓய்வை கழித்தனர். அந்த போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.

தெலுங்கு மருமகன்
இந்நிலையில் காடன் படத்தின் தெலுங்கு வர்ஷனான ஆரண்யா படத்தின் பிரி வியூ நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால், விரைவில் ஜூவாலா கட்டாவை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெலுங்கு மருமகன் ஆகப்போவதாகவும் கூறினார்.
Recommended Video

ப்ரி பிரைடல் பாஷ்
இதனால் இருவருக்கும் எப்போது திருமணம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள காடன் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இதனிடையே ஜூவாலா கட்டாவும் திருமணத்திற்கு முந்தைய ப்ரி பிரைடல் பாஷ் பார்ட்டியை தனது தோழிகளுடன் கொண்டாடியுள்ளார்.

விரைவில் தேதி
அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஜூவாலா கட்டா. காடன் படத்திற்காக விஷ்ணு விஷாலுக்கு ஜூவாலா கட்டா நிதியுதவி செய்துள்ளார். தற்போது படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் விரைவில் இருவரின் திருமண தேதியும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











