சென்னையில் சில்லிங்: விஷ்ணு விஷாலுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட ஜுவாலா

By Siva

Recommended Video

Vishnu Vishal | Jwala Gutta | இதுதானா விஷ்ணு விஷால் மனைவியை பிரிந்தர்க்கான காரணம்- வீடியோ

சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா சென்னையில் நண்பர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும், நடிகர் விஷ்ணு விஷாலும் நல்ல நண்பர்கள் ஆவர். அவர்களுக்கு பொதுவான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வது உண்டு.

Jwala Gutta chilling in Chennai

இந்நிலையில் ஹைதராபாத்தில் வசிக்கும் ஜுவாலா சென்னை வந்துள்ளார். சென்னை வந்த இடத்தில் நண்பர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஜுவாலா கட்டா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், சரி காதல் உறுதியாகிவிட்டது. அடுத்து என்ன கல்யாணமா, வாழ்த்துக்கள் சகோதரி என்று வாழ்த்தியுள்ளனர். சிலரோ, உங்களால் தான் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவி ரஜினியை பிரிந்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக விஷ்ணு விஷால் ஜுவாலாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து பேசியதுடன், கண்டபடி விமர்சித்தார்கள். இந்த பொம்பளைக்காகவா மனைவியை பிரிவது, தவறு செய்கிறீர்கள் விஷ்ணு விஷால் என்று எச்சரித்தனர்.

ஜுவாலாவுக்கும், எனக்கும் இடையே இருப்பது நட்பு மட்டுமே என்று விஷ்ணு விஷால் அளித்த விளக்கத்தை ஏற்க யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் ஜுவாலா வெளியிட்ட புகைப்படத்தால் அவர்கள் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று நெட்டிசன்களாக ஒரு முடிவுக்கு வந்தவிட்டார்கள்.

இது விஷ்ணு விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதை மறந்து நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள். ஜுவாலாவை எப்படி கரெக்ட் செய்தீர்கள், மனைவியை விரட்டிவிட்டு இவரோடு சில்லிங்கா என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்தாலும் அது அவரின் சொந்த விஷயம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதை நெட்டிசன்கள் ஒருபோதும் மனதில் கொள்வது இல்லை.

விஷ்ணு விஷால் மனைவியை பிரிந்த போதிலும் அவருடன் நட்பாகவே பழகி வருகிறார். மகன் ஆர்யனுக்காக இருவரும் நண்பர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X