லாக்டவுனை விட இவங்க இம்சை தாங்கலையே.. வீடியோ கால் போட்டு ரொமான்ஸ் பண்ணுங்க ஜூவாலா கட்டா!
சென்னை: இந்த லாக்டவுன் நேரத்தில் விஷ்ணு விஷாலை ரொம்ப மிஸ் பண்ணுவதாக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா பதிவிட்டுள்ளார்.
Recommended Video
36 வயதாகும் பிரபல வீராங்கனை ஜூவாலா கட்டா நடிகர் விஷ்ணு விஷாலை காதலித்து வருகிறார்.
விரைவில், விஷ்ணு விஷாலை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கணவரை பிரிந்து
பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுக்கு கடந்த 2005ம் ஆண்டு சேத்தன் ஆனந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆறு ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த ஜூவாலா கட்டா 2011ம் ஆண்டு குடும்ப பிரச்சனைகள் காரணமாக சேத்தன் ஆனந்தை விவாகரத்து செய்தார்.

புதிய காதல்
கடந்த ஆண்டு தனது மனைவியை பிரிந்த நடிகர் விஷ்ணு விஷாலை தற்போது காதலித்து வருகிறார் ஜூவாலா கட்டா. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த கொரோனா வைரஸ் இந்த புதிய காதல் ஜோடியை தனித்தனியே பிரித்து வைத்து விட்டது.

நினைத்து நினைத்து
அன்புள்ள காதலனை காண முடியாத வேதனையில் அவரை நினைத்து நினைத்து தினமும் வாடி வருகிறார் ஜூவாலா கட்டா. விஷ்ணு விஷால் பதிவிடும் ஒவ்வொரு ட்வீட்டுகும் உடனுக்குடன் ஓடோடி வந்து கமெண்ட் செய்து வருகிறார் ஜூவாலா கட்டா. தற்போது, விஷ்ணு விஷாலை சந்திக்க முடியாத ஏக்கத்தில், அவருடன் இருந்த பழைய போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

வெறும் லைக் மட்டுந்தான்
விஷ்ணு விஷால் எப்போ ட்விட்டரில் போஸ்ட் போடுவார், அதற்கு கமெண்ட் செய்யலாம் என ஆன்லைனிலே ஜூவாலா கட்டா காத்துக் கிடக்கிறார். ஆனால், நடிகர் விஷ்ணு விஷாலோ, அதற்கு மாறாக ஜூவாலா கட்டா பதிவிடும் ட்வீட்டுகளுக்கு வெறும் லைக்கை மட்டுமே கொடுத்து அமைதி காத்து வருகிறார்.

மாற்றி மாற்றி
இந்த புதிய காதல் ஜோடி இருவரும் மாற்றி மாற்றி தங்கள் காதலை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் உறுதி படுத்தி வருகின்றனர். விஷ்ணு விஷாலின் போட்டோவை பகிர்ந்து தற்போது ஜூவாலா கட்டா ஃபீல் பண்ணி உள்ள நிலையில், முன்னதாக ஜூவாலா கட்டாவுடன் இருவரும் வெள்ளை உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு விஷ்ணு விஷால் தனது ஏக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.


Click it and Unblock the Notifications











