'ஆமா, விரைவில் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்...' நடிகர் விஷ்ணு விஷால் மறைச்சதைச் சொல்லிட்டாரே ஜ்வாலா!
சென்னை: தான் காதலிக்கும் நடிகரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, பேட்மிண்டன் வீராங்கனை தெரிவித்துள்ளார்
Recommended Video
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்தார்.
இவரும் பிரபல இயக்குனரும் நடிகருமான நட்ராஜின் மகள் ரஜனியை காதலித்து, கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஜுவாலா கட்டா
இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக 2018 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியானது. இருவரும் இரவு விருந்துகளில் பங்கேற்கும் போட்டோக்களும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் அவ்வப்போது வெளியாயின.

வீடியோ
இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் அதை மறுத்து வந்தார். இருப்பினும் தனது எஃப்ஐஆர் படத்தின் புரமோஷன் தொடர்பாக இருவரும் இணைந்து பேசும் வீடியோ வெளியானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பிரிவதே இல்லை போல என கமென்ட் பதிவிட்டு வந்தனர்.

மிஸ்ஸிங் மை பூ
பின்னர் இருவரும் காதலை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், விஷ்ணு விஷாலுடன் தான் நெருக்கமாக இருக்கும் போட்டோவை கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டு மிஸ்ஸிங் மை பூ என சோகமாக இருக்கும் எமோஜிகளை பதிவிட்டிருந்தார், ஜுவாலா கட்டா. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார், நடிகர் விஷ்ணு விஷால்.

காதல் உண்மைதான்
'இட்ஸ் ஓகே.. இப்போதைக்கு சமூக விலகல் ரொம்ப முக்கியம். எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என குறிப்பிட்டு இருந்தார் விஷ்ணு விஷால். இந்நிலையில் விஷ்ணு விஷாலை காதலிப்பது உண்மைதான் என்றும் நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் ஜ்வாலா கட்டா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

திருமணம்
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், உண்மைதான். நாங்கள் காதலித்து வருகிறோம். நான் ஏற்கனவே சொன்னது போல, இதில் மறைக்க வேண்டியது ஏதுமில்லை. நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறோம். தேதி முடிவானதும் அறிவிப்போம். இதுபற்றி மேலும் தெரிவிக்க ஏதும் இல்லை' என்று கூறியுள்ளார். விஷ்ணு விஷால், திருமணம் பற்றி ஏதும் தெரிவிக்காத நிலையில், ஜ்வாலா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











