அவங்களுக்காகதானே எடைய குறைச்சீங்க.. விஷ்ணு விஷாலிடம் கேட்ட ரசிகர்.. பதில் சொன்னது யாருன்னு பாருங்க!
Recommended Video
சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விளையாட்டு வீராங்கனையான ஜுவாலா கட்டா முந்திக்கொண்டு பதில் அளித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலும் பெட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் காதலிப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

நண்பர்கள்தான்
இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷாலிடம் கேள்வி எழுப்பிய போது, இருவரும் நல்ல நண்பர்கள்தான் என்றார். இருவரும் அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக கூறினார்.

எடையை குறைத்து
மேலும் கல்யாணம் என்றாலே பயமாக இருக்கிறது என்றார். இந்நிலையில் நடிகர் விஷால் தனது உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக் வைத்து அண்மையில் வித விதமான போஸ்களில் பல போட்டோக்களை வெளியிட்டார்.

பாலிவுட் நடிகர் போன்று
அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் போன்று இருப்பதாக கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் இப்போதுதான் பழையபடி ஃபார்முக்கு வந்திருக்கிறீர்கள் என்றும் கருத்து கூறினர்.

அவர்தான் சொன்னாரா?
அப்போது ரசிகர் ஒருவர், புரோ நீங்கள் இதை ஜுவாலா கட்டாவுக்காகதானே செய்தீர்கள்.. அவர்தான் உங்களை எடையை குறைக்குமாறு கூறியதாகவும் அப்போதுதான் இருவரும் அழகான ஜோடியாக இருக்க முடியும் என்று கூறியதாகவும் கேள்வி பட்டோம்.. அப்படியா? என்று கேட்டிருந்தார்.
அது உண்மையில்லை..
ரசிகரின் கேள்விக்கு விஷ்ணு விஷால் பதில் அளிக்கும் முன்பு முந்திக்கொண்டு பதில் அளித்துள்ளார் ஜுவாலா கட்டா. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில், இல்லை.. அது உண்மையில்லை. அவர் அவருக்காக இதை செய்தார் என தெரிவித்தார்.
நல்ல பொருத்தம்
அதனை பார்த்த அந்த ரசிகர், ஓ.. ஓகே ஓகே.. எப்படியோ வாழ்த்துகள்.. நீங்கள் இருவரும் பொருத்தமாக இருக்கிறீர்கள் என கூறியுள்ளார். ஏற்கனவே இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் பரவி வரும் நிலையில் விஷ்ணு விஷாலிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜுவாலா கட்டா பதில் அளித்திருப்பது ரசிர்களை குழப்பமடைய செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











