இதுக்கு பேருதான் திசை திருப்பறதா.. கிஸ்ஸிங் போட்டோவை போட்ட ஜூவாலா கட்டா.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தனது காதலியான ஜூவாலா கட்டாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.

வெண்ணிலா கபடிக்குழு" படம் மூலம் அறிமுகமானவர்கள் சூரி மற்றும் விஷ்ணு விஷால். இருவருமே தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளானர்.

நடிகர் விஷ்ணு விஷாலுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் சூரி. இதனால் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, சூரிக்கு அறிமுகமாகினார்.

ரூ.40 லட்சம் சம்பளம்

ரூ.40 லட்சம் சம்பளம்

இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் "வீர தீர சூரன்" என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன. அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

நிலம் வாங்கிக்கொள்ளலாம்

நிலம் வாங்கிக்கொள்ளலாம்

எனினும் பேசப்பட்ட அடிப்படையில் சம்பளம் தராததால் அது குறித்து சூரி கேட்டபோது சம்பள பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் ஒன்று விலைக்கு வருகிறது அதை வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறியதாக தெரிகிறது.

பாதையில்லை..

பாதையில்லை..

இதனை தொடர்ந்து 3.15 கோடி ரூபாய் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் காட்டிய இடத்தில் பாதையே இல்லை என தெரிந்ததால் பணத்தை திருப்பி கேட்டுள்ளார் சூரி. ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால். மீதி ரூ. 2.70 கோடி தரவில்லை.

சூரி மன உளைச்சல்

சூரி மன உளைச்சல்

மீதி பணத்தை தருவதாக கூறி பல மாதங்களாக ரமேஷ் குட்வாலா, அன்புவேல் ராஜன் ஏமாற்றி வந்ததால் நடிகர் சூரி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூரி அண்மையில் போலீஸில் புகார் அளித்தார். இதனால் இந்த விவகாரம் பூதாகரமானது.

தொடர்பும் இல்லை

தொடர்பும் இல்லை

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகர் விஷ்ணு விஷால் எனக்கும் எங்க அப்பாவுக்கும் அந்த நிலம் வாங்கிய விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனை எனது அப்பா ரமேஷ் குடவலாவுக்கு தெரியும். அவ்வளவுதான் எங்களுக்கும் அவருக்குமான தொடர்பு என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

நியாயமற்ற சமூகம்

நியாயமற்ற சமூகம்

மேலும் சூரியின் சாப்டர் இனிமேல் என் வாழ்க்கையில் இல்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில் சூரியை சாடும் வகையில் விஷ்ணு விஷாலின் காதலியான ஜூவாலா கட்டா, நியாயமற்ற சமூகம் என சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமாக கூறியிருந்தார்.

முத்தம் கொடுக்கும் விஷ்ணு விஷால்

முத்தம் கொடுக்கும் விஷ்ணு விஷால்

இந்நிலையில் ஜூவாலா கட்டாவை விஷ்ணு விஷால் கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் போட்டோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் எனக்கு தண்ணீர் குடிக்க எவ்வளவு பிடிக்கும் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். டேபிள் முழுக்க தண்ணீர் பாட்டீல்கள் நிரம்பியுள்ளன.

டாப்பிக்கை மாற்றுவதா?

டாப்பிக்கை மாற்றுவதா?

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு பெயர்தான் டாப்பிக்கை சேஞ்ச் பண்ணுவதா என கேட்டு விளாசியுள்ளனர். இன்னும் சிலர் நீங்கள் சரியான ஃபிராடு பசங்க என்றும் கிழித்து தொங்கவிட்டுள்ளனர். ஏற்கனவே திருமணமான விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரது மனைவியை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X