நியாயமற்ற சமூகம்.. சூரி கொடுத்த மோசடி புகார்.. விஷ்ணு விஷாலுக்கு ஆதரவாக ஜூவாலா கட்டா காட்டம்!

By

சென்னை: இந்தச் சமூகம் நியாயமற்றதாக, எளிதில் ஒருவரை தீர்மானிக்கக் கூடிய நிலையில் இருக்கிறது என்று நடிகர விஷ்ணு விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஜூவலா கட்டா கூறியுள்ளார்.

நடிகர் சூரி, சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து சமீபத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி, 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, 'வீர தீர சூரன்' படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தார்.

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

இதில், ரமேஷ், நடிகர் விஷ்ணு விஷாலில் தந்தை. இதையடுத்து இந்த புகாரை விஷ்ணு விஷால் மறுத்திருந்தார். உண்மையில் சூரிதான் எங்களுக்கு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்றும் அவர் கொடுத்திருப்பது பொய் புகார் என்றும் விரைவில் உண்மை வெளிவரும் என்றும் கூறியிருந்தார்.

அட்வான்ஸ் பணம்

அட்வான்ஸ் பணம்

கவரிமான் பரம்பரை என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது என்று தெரிவித்து இருந்தார் விஷ்ணு விஷால்.

ஜுவாலா கட்டா

ஜுவாலா கட்டா

இதற்கிடையே, விஷ்ணு விஷால் திருமணம் செய்ய இருக்கும் ஜுவாலா கட்டா தனது ட்விட்டரில் இந்த விவகாரம் தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தச் சமூகம் நியாயமற்றதாக, எளிதில் ஒருவரை தீர்மானிக்கக் கூடிய நிலையில் இருக்கிறது.

போராடி வந்தவராக

போராடி வந்தவராக

நல்ல பின்னணியில், பணக்காரர்போல் இருப்பவருடன் ஒப்பிடும்போது மற்றவர் அப்படி இல்லை எனில், சமூகம் அவர்களுக்கு பரிந்து பேச தொடங்கி விடுகிறது. ஏனென்றால் அவர் வாழ்க்கையில் போராடி வந்தவர் போலத் தோற்றமளிப்பதாலும் தனது போராட்டம் பற்றியே எப்போதும் பேசுவதாலும்தான்.

அடிப்படை உரிமை

அடிப்படை உரிமை

தங்கள் போராட்டம் பற்றிப் பேசாதவர்களும் அவரைவிடக் குறைந்த பிரச்னைகளைச் சந்தித்தவர்களும் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு அடிப்படை உரிமை இல்லையா? பார்ப்பதற்குக் குறிப்பிட்ட விதத்தில் இருக்கிறார் என்பதற்காக அவரை நீங்கள் எப்படி நம்ப முடியும்?

தோன்றவில்லையா?

தோன்றவில்லையா?

வெள்ளையாக பெண்ணை மணந்தால் குழந்தைகள் அப்படியே பிறக்கும் என்று நினைக்கும் சமூகம் இது. ஆனால், அதே சமூகம்தான், ஒருவர் பார்க்க நன்றாக இருந்தால் முதல் பார்வையிலேயே, அவரை வில்லன் என்று முடிவு செய்து விடுகிறது? இது பாசாங்கு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?. இவ்வாறு ஜூவாலா கட்டா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X