நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பிறந்தநாள்.. நள்ளிரவில் காதலி கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரலாகும் போட்டோ!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது காதலியான ஜுவாலா கட்டா சர்ப்ரைஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களையும் கொண்டுள்ளார் விஷ்ணு விஷால். நடிகராக மட்டுமின்றி விஷ்ணு விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் விஷ்ணு விஷால் படங்களையும் தயாரித்து வருகிறார்.

பிரபலத்துடன் நெருக்கம்

பிரபலத்துடன் நெருக்கம்

ஏற்கனவே திருமணம் ஆன நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியான ரஜினி நட்ராஜை கடந்த 2018ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு காரணம் பிரபலம் ஒருவருடன் விஷ்ணு விஷாலுக்கு ஏற்பட்ட நெருக்கமே காரணம் என கூறப்பட்டது.

இரவு பார்ட்டிகள்

இரவு பார்ட்டிகள்

இந்நிலையில்தான் நடிகர் விஷ்ணு விஷாலும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியானது. இருவரும் பார்ட்டிகளில் பங்கேற்கும் போட்டோக்களும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் அவ்வப்போது வெளியானது.

டேட்டிங் போட்டோக்கள்

டேட்டிங் போட்டோக்கள்

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும் தகவல் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் டேட்டிங் சென்ற போட்டோக்கள் வெளியாயின.

பிறந்தநாள்

பிறந்தநாள்

லாக்டவுன் நேரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளங்களில் காதல் மொழி பேசி வந்தனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

PROMO | ACTOR PRASANNA AND DIRECTOR MYSSKIN ISSUE | COMING SOON | FILMIBEAT TAMIL
ஜுவாலா கட்டா சர்ப்ரைஸ்

ஜுவாலா கட்டா சர்ப்ரைஸ்

இதனை முன்னிட்டு நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கேக் செய்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் ஜுவாலா கட்டா. இருவரும் நள்ளிரவில் ஒன்றாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விஷ்ணு விஷால் என்னுடைய பிறந்த நாள் சர்ப்ரைஸ் என்ற கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கட்டியணைத்தப்படி

கட்டியணைத்தப்படி

இதனிடையே விளையாட்டு வீராங்கனையான ஜுவாலா கட்டா ஹேப்பி பர்த்டே பேபி என விஷ்ணு விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியியுள்ளார். மேலும் விஷ்ணு விஷாலை கட்டியணைத்தப்படி இருக்கும் செல்ஃபி போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X