விஷ்ணு விஷாலை வாழ்த்திய ஜுவாலா: அதற்கு ஏன் முத்த போட்டோன்னு கேட்கும் ரசிகர்கள்
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அவரின் தோழி ஜுவாலா கட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விஷ்ணு விஷாலை அவரின் நெருங்கிய தோழியான பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா வாழ்த்தியுள்ளார்.
பிறந்தநாள்
தான் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜுவாலா கட்டா. மேலும் விஷ்ணு விஷாலை விரைவில் சந்திப்பதாகவும் தெரிவித்து முத்தம் கொடுப்பது போன்ற ஸ்மைலியை போட்டுள்ளார் அவர். ஜுவாலாவின் ட்வீட்டை பார்த்த சிலர் இவருக்கும், விஷ்ணு விஷாலுக்கும் எப்படி பழக்கம். இருவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள் ஆச்சே. இவர்களுக்கு எப்படி பொதுவான நண்பர்கள் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஜுவாலா ட்வீட்டை பார்த்து ஒருவர் சந்தேகம் என்று கூற அவரோ எந்த சந்தேகமாக இருந்தாலும் என்னிடம் கேட்கவும் என்று பதில் அளித்துள்ளார்.

புகைப்படங்கள்
ஜுவாலா கட்டாவுக்கு என்னை பிடிக்கும், எனக்கு அவரை பிடிக்கும். ஆனால் நாங்கள் எங்களின் வேலையில் பிசியாக இருப்பதால் இந்த உறவு குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று விஷ்ணு விஷால் ஜுவாலா பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இந்நிலையில் ஜுவாலா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்தால் அவர்கள் நண்பர்கள் போன்று தெரியவில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

மறுமணம்
ஜுவாலா தனது தோழி என்று விஷ்ணு விஷால் தெளிவாக கூறிவிட்டார். இருப்பினும் இந்த நெட்டிசன்களோ, ஜுவாலாவுக்காக தான் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை பிரிந்திருக்கிறார். விரைவில் ஜுவாலாவை திருமணம் செய்து கொள்வார் பாருங்களேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விவாகரத்து
விஷ்ணு விஷால் ரஜினியை காதலித்து திருமணம் செய்தார். அவர்கள் பிரிவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பிரிவுக்கு பிறகும் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள். மகன் ஆர்யனுக்காக அவர்கள் நண்பர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











