»   »  என்னா ஒரு ஆட்டம்... ஜோதிலட்சுமி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜெ.வே திணறிய காட்சி!

என்னா ஒரு ஆட்டம்... ஜோதிலட்சுமி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜெ.வே திணறிய காட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடிமைப் பெண் படத்தில் வரும் காலத்தை வென்றவன் நீ பாடலில் ஜோதிலட்சுமியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டு நடனமாடியிருப்பார்கள். அதில் ஜோதிலட்சுமியின் வேகத்திற்கு இணையாக ஆட முடியாமல் ஜெயலலிதா திணறியிருப்பதைக் காண முடியும்.

1963ம் ஆண்டு வெளியான பெரிய இடத்துப் பெண் படம் மூலம் நடிகையான ஜோதிலட்சுமி ரத்த புற்றுநோயால் அவத்திப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று மரணம் அடைந்தார். நடனமாடுவதற்கு பெயர் போனவர் ஜோதிலட்சுமி.

எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் வரும் காலத்தை வென்றவன் நீ பாடலுக்கு ஜோதிலட்சுமியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டு நடனம் ஆடியிருப்பார்கள். ஜோதிலட்சுமியோ இடுப்பை வளைத்து துள்ளலாக ஆடியிருப்பார்.

ஜெயலலிதா ஜோதிலட்சுமியின் வேகத்திற்கு இணையாக ஆட முடியாமல் சற்றே திணறியிருப்பார். ஜோதிலட்சுமியின் ஆட்டத்தை ஜெயலலிதா தனது முகபாவத்தால் சரி செய்திருப்பார். ரிஷாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பம்பை உடுக்கை கட்டி பாடலுக்கு அம்சமாக ஆடியிருப்பார் ஜோதிலட்சுமி.

இதுதான் அந்தப் பாடல்

ஜோதிலட்சுமியின் நடனம் எம்.ஜி.ஆருக்கு மிகுவும் பிடிக்கும். இதனாலேயே தனது படங்களில் ஜோதிலட்சுமிக்கு என ஒரு பாட்டை கொடுத்து ஆட வைத்து வந்தார்.

English summary
Jyothi Lakshmi was known for her dancing skills. In Adimai Pen movie, she outsmarted Jayalalithaa with her dancing skills.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil