»   »  மணி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறாரா ஜோதிகா?

மணி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறாரா ஜோதிகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ஜோதிகா.

திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலேயே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மணிரத்னம்

மணிரத்னம்

மகளிர் மட்டும் படத்தில் நடித்து முடித்துள்ள ஜோதிகா அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறாராம். இதை அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சூர்யா

சூர்யா

சூர்யா மணியின் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். அவரது தம்பி கார்த்தி மணி இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்தார். இந்நிலையில் ஜோதிகாவும் மணியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

மணிரத்னம் ஜோதிகாவை வைத்து எடுக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

குடும்பம்

குடும்பம்

முன்னதாக ஒரு பெரிய ஹீரோ படத்தில் நடிக்க ஜோதிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. குடும்பத்தார் எதிர்க்கவே அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பாரா என்று தெரியவில்லை.

படங்கள்

படங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் அண்மை காலமாக வெளியாகும் படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்துவிடுகின்றன. அவரது ஓகே காதல் கண்மணி மட்டுமே அண்மையில் ஹிட்டான படம். அவரும் படத்தை கவிதை போன்று அழகாக அளிக்க அது தோல்வி அடைந்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jyothika has confirmed that she is going to act in Mani Ratnam's movie. Buzz is that Vijay Sethupathi may do the lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil