டபுள் ஆக்ஷனில் நடிக்க வைக்கத்திட்டம்.. சந்திரமுகி 2 வில் ஜோதிகா? தீவிர பேச்சுவார்த்தையில் படக்குழு!
சென்னை: சந்திரமுகி 2 படத்தில் நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கடந்த 2005ஆம் ஆண்டு திரைக்கு வந்து சக்கைப் போடு போட்டப் படம் சந்திரமுகி. பிரபல இயக்குநர் பி வாசு இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேல், மாளவிகா, வினித் என பலரும் நடித்திருந்தனர். இந்தப் படம் படையப்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது.

இரண்டாம் பாகம்
இப்படத்தில் சந்திரமுகியாக மிரட்டியிருப்பார் ஜோதிகா. அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. குறிப்பாக ராரா பாடல் வேற லெவலில் ஹிட்டடித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் பி வாசு அண்மையில் அறிவித்தார்.

வேட்டையன்
இதில் லீடிங் ரோலில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறினார். படம் குறித்து பேசிய இயக்குநர் வாசு, இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும், வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார்.

டபுள் ஆக்ஷன் ?
இந்நிலையில் சந்திரமுகியாக நடிக்கப் போவது யார்? என்று கேள்வி எழுந்துள்ளது. ஜோதிகாவை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து அதில் ஒரு கேரக்டரை சந்திரமுகியாக காட்ட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜோதிகாவிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு முக்கியத்துவம்
திருமணத்திற்கு பிறகு அதிகம் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











