பெரியம்மா நக்மாவோட ஹைட்டா வளர்ந்த ஜோதிகா மகள்.. திருமண விழாவில் குழந்தைகளுடன் ஜோ.. சூர்யா எங்கே?

மும்பை: குடும்ப திருமண விழாவில் நடிகைகள் ஜோதிகா மற்றும் நக்மா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. ஜோதிகாவின் மகள் மற்றும் மகனும் செம க்யூட்டாக இடம்பெற்றிருப்பதை பார்த்த சூர்யா ரசிகர்கள் ஹார்ட்டின்களை விட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சினிமாவில் படு பிசியாக இருந்தாலும், அடிக்கடி குடும்ப விழாக்கள் மற்றும் நடிகர்களின் வீடுகளுக்கு செல்வது என ஃபேமிலி டைமையும் அதிகம் செலவிட்டு வருகின்றனர்.

குடும்ப உறவுகளுடன் ஜோதிகா மற்றும் ஜோவின் குழந்தைகள் இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சூர்யா எங்கே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குடும்ப விழாவில் ஜோதிகா

குடும்ப விழாவில் ஜோதிகா

நடிகை ஜோதிகா மும்பையில் நடைபெற்ற தனது குடும்ப விழாவில் கலந்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பெற்றோர்கள், உறவினர்கள், குழந்தைகள், சகோதரி உள்ளிட்டோருடன் நடிகை ஜோதிகா எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அக்கா நக்மாவுடன்

அக்கா நக்மாவுடன்

தங்கை ஜோதிகாவுக்கு முன்னதாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நக்மா. ரஜினிகாந்தின் ஆல் டைம் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான பாட்ஷா, கார்த்தியின் பிஸ்தா, மேட்டுக்குடி என ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்திய அக்கா நக்மாவுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கை ஜோதிகா எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

 பெரியம்மாவை விட ஹைட்

பெரியம்மாவை விட ஹைட்

ஜோதிகாவின் மகள் தியா கிடுகிடுவென வளர்ந்து விட்டார். அடிக்கடி ஜோதிகாவின் மகளின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். க்ரூப் போட்டோவில் பெரியம்மா நக்மா அருகே நிற்கும் ஜோதிகாவின் மகள் தியா பெரியம்மாவை விட ஹைட்டாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் குழந்தைக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கம்மா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சூர்யாவை போலவே

சூர்யாவை போலவே

மகள் தியா அப்படியே அம்மா ஜோதிகாவை போலவே அழகாக உள்ள நிலையில், மகன் தேவ் அப்படியே அப்பா சூர்யாவை போல உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு தேவ் அழகினை ரசித்து வருகின்றனர். குடும்பத் திருமண விழாவில் ஜோதிகா, நக்மா, தியா மற்றும் தேவ் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

சூர்யா எங்கே

சூர்யா எங்கே

ஜோதிகாவின் குடும்ப விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. க்ரூப் போட்டோவில் சூர்யாவை காணாத நிலையில், சூர்யா எங்கே என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சூர்யா 42 படத்தின் பணிகள் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செல்லவில்லை எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X