கிளாமர் டிரெஸில்.. வெட்டிப் பேச்சு பேசி.. வீண் வம்பிழுக்கும் நடிகைகளே இவங்கள பார்த்து திருந்துங்க!

சென்னை: நடிகை ஜோதிகா இன்று செய்திருக்கும் ஒரு காரியம் வெட்டிப்பேச்சு பேசி பிரபலமாக நினைக்கும் ஒரு சில நடிகைகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

Recommended Video

ஜோதிகாவின் வின் சரியான பதிலடி.. தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவில் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் நடிகை ஜோதிகா.

விருது விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகா கோவில்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் மக்கள் மருத்துவமனைகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் உதவ வேண்டும் என்று பேசியிருந்தார்.

ஆதங்கப்பட்ட ஜோதிகா

ஆதங்கப்பட்ட ஜோதிகா

குறிப்பாக தஞ்சை பெரிய கோவில் செழிப்பாக இருப்பதாகவும் ஆனால் தஞ்சை அரசு மருத்துவமனை எந்த பராமரிப்புமே இல்லாமல் மோசமாக இருப்பதாகவும் கூறினார். இதனை தான் படப்பிடிப்புக்கு சென்றபோது கண்கூடாக பார்த்தாக கூறி ஆதங்கப்பட்டார்.

ஆக்ஷனில் இறங்கிய ஜோதிகா

ஆக்ஷனில் இறங்கிய ஜோதிகா

இதற்காக அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவதாக கூறி அவரை விமர்சித்தனர். சமூக வலைதளங்களிலும் கடுமையாக திட்டி தீர்க்கப்பட்டார் நடிகை ஜோதிகா. இந்நிலையில் தன்னை விமர்சித்தவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் டயலாக்கே இல்லாமல் ஆக்ஷனில் இறங்கியுள்ளார் ஜோதிகா.

ரூ. 25 லட்சம் உதவி

ரூ. 25 லட்சம் உதவி

அதாவது, ஜோதிகா குறிப்பிட்டு பேசிய தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு தற்போது 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். அந்த தொகையை கொண்டு மருத்துவமனைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அங்கு இருக்கும் குழந்தைகள் விளையாட்டு பூங்காவினை சீரமைப்பு செய்வதற்கான தொகையையும் ஜோதிகா வழங்கியிருக்கிறார்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

இந்த உதவியை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மருத்துவமனை முதல்வர் ஆகியோரின் ஒப்புதலோடு செய்து முடித்திருக்கிறார் ஜோதிகா. இதனால் அவரை வசைப்பாடிய வாயெல்லாம் தற்போது வாழ்த்தி வருகிறது. நடிகை என்றால் நடிப்போடு மட்டும் நில்லாமல் தங்களை வாழ வைக்கும் மக்களுக்கு இதுபோல உதவ வேண்டும்.

பிரச்சனையை இழுக்கும் ..

பிரச்சனையை இழுக்கும் ..

பப்ளிசிட்டிக்காக அடுத்தவர்களுடன் ஆபாசச் சண்டை போடுவது, வெட்டித்தனமாக ஏதாவது பேசி பிரச்சினை இழுத்தபடி இருப்பது, அடுத்தவர்களைக் குறை சொல்வது, பொய்யான புகார்களைக் கூறுவது, மற்றவர்களை மட்டம் தட்டுவது, கவர்ச்சிகரமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு விளம்பரம் தேடுவது என்று பொழுதை போக்காமல் நடிகை ஜோதிகா சமூகத்திற்காக உண்மையாகவே களத்தில் இறங்கியுள்ளார்.

பப்ளிசிட்டிக்காக..

பப்ளிசிட்டிக்காக..

பப்ளிசிட்டி பெற வேண்டும், பிரபலம் ஆக வேண்டும் என மலிவான வேலைகளில் ஈடுபடும் ஒருசில நடிகையர்களுக்கு மத்தியில் மிகப் பெரிய ரோல் மாடலாக உருவெடுத்துள்ளார் நடிகை ஜோதிகா. வெட்டித்தனமாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பேசிக் கொண்டிருக்கும் சில நடிகைகள் இதை உணர்ந்து முன்னுதாரணமாக செயல்பட்டால் மக்கள் மனதில் இடம் பெறலாம்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X