நாங்கள் பிரிந்து வாழ்கிறோமா?.. பிடிக்கவில்லை.. அதற்கு காத்திருக்கிறேன்.. விட்டு விளாசிய ஜோதிகா

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியான சூர்யா - ஜோதிகா இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்துவருவதாக பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். அது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும்; பயில்வான் சொல்வதில் துளிக்கூட உண்மை இருக்காது என்று பேச ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழலில் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக ஜோதிகா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஜோதிகா வாலி படத்தின் மூலம் அறிமுகமாகி; பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தால் ஃபேமஸ் ஆனார். அந்தப் படத்தில் நடித்தபோது சூர்யாவை காதலிக்க ஆரம்பித்தார். பொதுவாக காதலில் விழுந்தால் சினிமா கரியரில் கவனம் செலுத்த தவறும் நடிகைகளுக்கு மத்தியில் ஜோதிகாவோ காதலில் இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார். அப்படி அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதன் காரணமாக 90களிலும் 2000களின் ஆரம்பத்திலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

Jyothika comments on reports that Suriya and Jyothika are living apart

காத்திருப்பு: ஒருபக்கம் சினிமாவில் பிஸி; மறுபக்கம் காதலில் பிஸி என சுற்றிக்கொண்டிருந்த ஜோதிகாவுக்கு இடியாக; சூர்யா வீட்டில் காதலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் காத்திருந்து; வீட்டில் பொறுமையாக எடுத்து சொல்லி சிவக்குமாரை ஒத்துக்கொள்ள வைத்தனர். பிறகு 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். சூர்யாவும், ஜோதிகாவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு உச்சக்கட்ட காதலோடு திருமண வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள்.

மும்பைக்கு ஷிஃப்ட்: நிலைமை இப்படி இருக்க ஜோதிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்த அவர் ஹிந்தியிலும் இப்போது கவனம் செலுத்துகிறார். அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக ஷைத்தான் படம் வெளியானது. அடுத்ததாக ஸ்ரீகாந்த் என்ற படம் வெளியாகவிருக்கிறது. சூர்யாவும் பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால்; இருவரும் சென்னையிலிருந்து மும்பைக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டனர்.

வதந்தி: திடீரென இரண்டு பேரும் மும்பைக்கு ஷிஃப்ட் ஆனதால் சூர்யா குடும்பத்துக்குள் புகைச்சல்; சிவக்குமாரிடமிருந்து சூர்யாவை ஜோதிகா பிரித்துவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவின. அதுமட்டுமின்றி ஜோதிகா நடிப்பது சிவக்குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருந்தன. அதேபோல் வாக்களிக்கவும் ஜோதிகா தமிழ்நாட்டுக்கு வரவில்லை. அப்படி அவர் வராதது இந்த விஷயத்துக்கு மேலும் தீனி போடுவது போல் ஆகிவிட்டது.

பயில்வான் ரங்கநாதன்: இந்தச் சூழலில் எப்போதும் ஏதாவது ஒன்றை பேசி வைக்கும் பயில்வான் ரங்கநாதன் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், சூர்யாவும், ஜோதிகாவும் பிரிந்து வாழ்கிறார்கள் என்று ஒரு குண்டை போட்டார். அது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோதிகா இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.

ஜோதிகா பேட்டி: சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு ஜோதிகா அளித்த பேட்டியில், "நானும், சூர்யாவும் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்துவருகிறோம். அப்படி இருக்கும்போது நாங்கள் பிரிந்துவிட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அதேபோல் வேண்டுமென்று இப்படியான பொய்யான விஷயத்தை பரப்புவது ரொம்பவே தவறான செயல். கங்குவா படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. அந்தப் படத்துக்காகத்தான் சூர்யா ஒரே ஹேர் ஸ்டைலில் இருந்துவருகிறார். அது எனக்கு பிடிக்கவில்லை. எப்போது அவர் முடி வெட்டுவார் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X